பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

push/pull tractor

1193

put


விரைவுத் தள்ளுதல் என்பது பதிவேடுகளுக்கு மாற்றுவதற்காக அடுக்கினைக் காலி செய்வதைக் குறிக்கிறது.

pushlpull tractor : தள்ளு/இழு டிராக்டர் : அச்சிடும் தாள் இழுவை காகிதத்தை பிளேட்டனுக்குத் தள்ளுமாறும் பிளேட்டனில் இருந்து அதை வெளியே எடுக்குமாறும் பொத்தானிடக் கூடியது. தனித் தாள் தொடர்படிவங்களைத் தள்ளலாம். பெரும்பாலான பல்பகுதி படிவங்களும் வில்லைகளும் மோதிக் கொள்வதைத் தடுக்க இழுக்கப்பட வேண்டும்.

pushup list : மேல் தள்ளுப்பட்டியல் : இனங்களின் பட்டியல். இதில் ஒவ்வொரு இனமும் பட்டியலின் இறுதியில் பதிவு செய்யப்படுகிறது. மற்ற இனங்கள் பட்டியலில் அவை இடம் பெற்றுள்ள இடத்தில் அப்படியே இருந்துவிடும்.

put : புட் : நிரலாக்கத் தொடரமைத்தலில் நடப்புப் பதிவேட்டை வெளியீட்டுக் கோப்பில் சேமிக்குமாறு கேட்கும் ஒரு வேண்டுகோள்.