பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

quadrillion

1195

quality engineering


பயன்படுத்தப்படும் பொது வான வழிமுறை. சுட்டிப்பொறி களில் அதிலுள்ள கோளத்தின் அசைவு செங்குத்து அல்லது கிடைமட்ட திசைகளின் அள வாய் மாற்றப்படுகிறது. இதை நிர்ணயிக்க இரண்டு சிறிய வட்டுகள் உள்ளன. இந்த வட்டுகள் உள்ளே பொருத்தப் பட்டுள்ள இரு உணரிகளுடன் (sensors) உரசி, விலகுவதைக் கொண்டு செங்குத்து, கிடை மட்டத் திசைகள் நிர்ணயிக்கப் படுகின்றன. இரண்டு உணரி களில் எது முதலில் உரசப் படுகிறது என்பதைக் கொண்டு சுட்டியின் நகர்வு இடப்பக்கமா, வலப்பக்கமா என்பது தீர்மானிக்கப்படுகிறது.

quadrillion : ஆயிரம் கோடி கோடி : ஒரு இலட்சம் கோடியில் ஆயிரம் மடங்கு.

quad-type cable : குவாட் வகை கம்பி வடம் : ஒட்டப்பட்ட இணைக்கம்பிகளை அதனுள் வைத்து ஒரு கேபிளை உருவாக்கி இதை வசதியாகச் செய்யமுடியும். நான்குகள் அல்லது குவாடுகளாக இதைச் செய்யலாம். ஒட்டும் பொருளின் நிறத்தை வைத்து ஒவ்வொரு கம்பியும் அடையாளம் காணப்படுகிறது. இணைக் குழாய் அடையாளத்துக்குரிய தர நிறக் குறியீட்டின்படி இஃது செய்யப்படுகிறது.

quality : தரம்

quality assurance : தர உத்திரவாதம்; தர உறுதிச்சான்று : ஒர் உற்பத்திப் பொருள் அல்லது ஒர் அமைப்பு விழக்காற்றில் நிலை நிறுத்தப்பட்ட தர வரையறை களைக் கொண்டுள்ளது என்பதை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் செயல்முறைகள்.

quality control : தரக் கட்டுப்பாடு : செய்முறைப்படுத்தப்படும் பொருளின் தரத்தை மதிப்பிட்டு அறியும் உத்தி. முன் அறுதியிட்ட தர அளவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து இது செய்யப்படுகிறது. தர அளவு குறைபாட்டுடன் இருந்தால், அதனைச் சீர்செய்ய தக்க நடவடிக்கை எடுக்க இது உதவுகிறது.

quality engineering : தர அளவுப் பொறியியல்; தரப் பொறியியல் : பொருள்களின் தரத்தை வகுத் துரைப்பதும், தர அளவுகளை நடைமுறையில் செயற்படுத்து வதும், ஏற்றுக் கொள்ளப்பட்ட தர அளவு வகைப்பாடுகளுக்கு