பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

auxiliary memory

119

avatar


செயல்கள். எண்ணெயிடல், கருவியைக் குளிர்வித்தல் முதலியன மாதிரித் துணைச் செயல்களாகும். auxiliary memory : துணை நிலை நினைவகம்.

auxiliary operation : துணைச்செயல்பாடு : மையச் செயலகத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத கருவியினால் செய்யப் படும் செயல்பாடு.

auxiliary speakers : துணை நிலை ஒலிப்பிகள்.

auxiliary store : துணை நிலைச் சேமிப்பு.

auxiliary storage : துணை நிலை சேமிப்பகம் : வட்டு, நாடா போன்ற சேமிப்பகங்களைக் குறிக்கின்றது. கணினியின் நுண்செயலி நிலையா நினைவகத்தைப் போன்று இவற்றை நேரடியாக அணுகுவதில்லை. தற்போதைய வழக்காற்றில் இத்தகையதுணைநிலை சேமிப்பகங்கள் வெறுமனே சேமிப்பகம் என்றோ, நிலையான சேமிப்பகம் என்றோ அழைக்கப்படுகின்றன. நுண் செயலி தற்காலிகச் சேமிப்பகமாய் நேரடியாகப் பயன்படுத்திக் கொள்ளும் நிலையா நினைவக (RAM) சிப்புகள் வெறுமனே நினைவகம் என்றே குறிக்கப்படுகின்றன.

available list : கிடைக்கும் பட்டியல் : ஒதுக்கப்படாத நினைவகப் பகுதிகளின் பட்டியல் என்றும் அறியப்படும்.

available point : கிடைக்கும் இடம் : கணினி முகப்பில் திரையில் உள்ள ஒரு இடம்.

Availability : கிடைக்கும் நிலை : குறிப்பிட்ட செயலுக்கான மணி நேரத்துக்கும், வன்பொருளின் சரியான இயக்க நேரத்துக்கும் உள்ள விகிதம். இதனை செயலாக்க விகிதம் என்று பெரும்பாலும் கூறுவதுண்டு.

availabłe time : கிடைக்கும் நேரம் : கணினி ஒன்று பயன்படுத்துவதற்கு கிடைக்கும் நேரம்.

available machine : கிடைக்கும் எந்திரம்.

available machine time : கிடைக்கும் எந்திர நேரம்.

available memory : கிடைக்கும் நினைவகம்.

avatar : அவதாரம் : சில வகை இணைய அரட்டை அறைகள் போன்ற மெய்நிகர் நடப்புச் சூழல்களில் பயனாளரின் வரை கலை வடிவிலான தோற்றம் இவ்வாறு அழைக்கப்படுகிறது. மனிதரின் இருபாலரில் ஒருவருடைய பொதுப்படையான படம்