பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1206

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

radix notation

1205

rag


பெண்ணை எளிதாகப் பெறலாம்.

1 0 1 0 → ஓர் இரும எண்

↓ ↓ ↓ ↓ → தலைகீழாக்கிகள்

0 1 0 1 → ஒன்றின் நிரப்பெண்

radix notation : அடியெண் குறிமானம்;அடிப்படை எண் குறிமானம்.

radix point : ஆதாரப் புள்ளி : ஓர் எண்மான முறையில், எழுத்து (ஒரு புள்ளி) அல்லது உட்கடை எழுத்து என்பது, ஒரு முழு எண்ணிலிருந்து பின்னப் பகுதியைப் பிரித்துக் காட்டும் புள்ளி ஆகும். சான்று : இருமப்புள்ளி (binary point) ;பதின்மப்புள்ளி (decimal point) ;பதினாறிலக்கப் பதின்மப் புள்ளி (hexadecimal point) ;எட்டிலக்கப்புள்ளி (octal point).

radix sorting : ஆதார வகைப் பாடு;ஆதார எண் வரிசையாக்கம் : 'இலக்க முறை வகைப் பாடு' (digital sorting) என்பதும் இதுவும் ஒன்றே .

radix sorting algorithm : அடியெண் வரிசைமுறையாக்கப் படி முறை : ஒரு உறுப்பினைக் கூறுகளாக்கி அடுத்தடுத்துள்ள அதன் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு குழுவாகப் பிரித்து வரிசைமுறையாக்கும் தருக்கப் படிமுறை. (எ-டு) 0-999 எண் வரம்புக்குள் உள்ள எண்களை வரிசைப்படுத்தும் முறையைப் பார்ப்போம். முதலில் எண்களின் பட்டியல், நூறு மதிப்பிடத்தில் உள்ள இலக்கத்தின் அடிப்படையில் 10 குழுவாகப் பிரிக்கப்படும். பிறகு ஒவ்வொரு குழுவும் பத்து மதிப்பிடத்தில் உள்ள இலக்கத்தின் அடிப்படையில் பத்துப் பட்டியல்களாக வரிசைமுறைப் படுத்தப்படும். இறுதியில் ஒவ்வொரு பட்டியலும் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் வரிசைமுறைப்படுத்தப்படும். இந்தத் தருக்கப் படிமுறை இரும மதிப்பு அடிப்படையில் உறுப்புகளை வரிசைமுறைப் படுத்த மிகவும் திறன் வாய்ந்ததாகும். ஒவ்வொரு குழுவும் அதிகப்பட்சம் இரண்டு குழுக்களையே கொண்டிருக்கும். ஒப்பீடும் இரண்டு இலக்கத் தோடுதான்.

rag : பிசிறு;பிசிறு ஓரம்;ஓரப் பிசிறு : அச்சிடப்பட்ட ஒரு பக்கத்தில் உரைப்பகுதியின் வரிகள் இடப்புற அல்லது வலப்புற ஓரத்தில் ஒரே சீராக இல்லாமல் முன்பின்னாக இருத்தல். இக்குறைபாடில்லாமல் தவிர்க்க ஆவணம் உருவாக்கப்படும் போதே ஓரச் சீர்மை (Justification) செய்யப்பட வேண்டும். ஒரு புறமோ