பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rapid execution engine

1211

raster image processor


rapid execution engine : அதி விரைவு இயக்கப் பொறி.

RARP : ரார்ப்;ஆர்ஆர்ப் : முன் பின்னான முகவரி கணக்கிடு நெறிமுறை என்று பொருள்படும் Reverse Address Resolution Protocol என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். டீசிபீ/ஐபீ நெறிமுறையில் ஒரு குறும்பரப்புப் பிணையம் இணையத்தில் இணைக்கப்படும்போது, ஒரு கணுவின் ஐபி முகவரியை, வன்பொருள் முகவரிகளைக்கொண்டே கணக்கிட்டுவிடும். ஆர்ஆர்ப், ஐபி முகவரியை நேரடியாகக் கண்டறியவே பயன்படுகிறது.

raster : ராஸ்டர் கிடைவரி : ஒர் ஒளிக்காட்சித் தோற்றத்தில் செவ்வகத் தோரணி கொண்ட வரிகள். கிடைமட்ட வரிகளை வருடிப்பெறும் வரைகலை தரவு என்பதால் ராஸ்டர் வருடல் என்று பெயர் உண்டாயிற்று.

raster display : பரவல் காட்சி;விரிவாக்கக் காட்சி : ஒரு குறிப்பிட்ட தோரணி மூலம் ஒரு கற்றையினைப் பரவலாகக் காட்டும் ஒளிப்பேழைக் காட்சி. புள்ளிகளின் அச்சுவார்ப் புருவுடன் ஒரு விரிவான உருக்காட்சியை உருவாக்கிக் காட்டுதல். 'கண் காட்சி' (Vector Display) என்பதிலிருந்து வேறுபட்டது.

raster fill : பரவல் நிரப்பல்;விரிவாக்க நிரப்பு : ஒர் ஒளிப்பேழைத் திரையிலுள்ள விரிவாக்கக் கோடுகளிடையிலான இடைவெளிகளை நிரப்புவதற்கு ஒரு வரைகலை ஒளிப்பதிவுக் கருவி பயன்படுத்தும் செய்முறை. இது திரையில் காணும் படத்திற்கு அதிகத்துல்லியமான தோற்றத்தை அளிக்கிறது.

raster graphics : பரவு வரைவியல்;விரிவாக்க வரைகலை : தரவுகளை ஒரே சீரான கிடைமட்ட வரிசைகளாகச் சேமித்து வைத்துக் காட்சியாகக் காட்டுவதற்கான அல்லது ஒரு காட்சித் திரையினை வினாடிக்கு 30-60 மடங்கு உருப்பெருக்கித் தெளிவான உருக்காட்சிகளாகக் காட்டுவதற்கான ஒருமுறை. விரிவாக்கக் காட்சிச் சாதனங்கள் பொதுவாக நெறியக் குழல்களை (vector tabes) விட விரைவாக செயற்படுபவை;மலிவானவை.

raster image : ராஸ்டர் படிமம்;கிடைவரிப் படிமம் : ஒளி-இருள் அல்லது பல்வேறுபட்ட வண்ணப்படப் புள்ளிகள் செவ்வகக் கோவையில் (Rectangular Array) அமைந்து உருவாக்கப்பட்ட ஒரு காட்சிப் படிமம்.

raster image processor : ராஸ்டர் படிமச் செயலி : நெறிய