பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

real-mode mapper

1219

real time clock


பணி இயக்கமுறைமைகள் இதில் செயல்படும். இதற்குத் தேவையான நினைவக மேலாண்மை மற்றும் நினைவகப் பாதுகாப்பினை பாதுகாக்கப்பட்ட பாங்கு வழங்குகிறது.

real-mode mapper : மெய்ப்பாங்கு உறவாக்கி : விண்டோஸ் 3. x இயக்கச் சூழலில் 32 துண்மி (பிட்) கோப்பு முறைமையை அணுகுவதற்கான வசதி. டாஸ் சாதன இயக்கிக்கு 32-பிட் வட்டு அணுகு இடைமுகத்தை இந்த மெய்ப்பாங்கு உறவாக்கி வழங்குகிறது.

real number : மெய்யெண்;மெய்ம்மை எண், உண்மை எண் : வேரளவையில்லாத எண் அல்லது கூறுபடாத எண் (பகா எண்).

Real Soon Now : மெய் விரைவில்-இப்போது;கூடியவிரைவில் : வெகுவிரைவில் : உண்மையில் வெகுவிரைவில் நடைபெறாத ஒன்றைக் குறிப்பது. ஒரு வணிகமுறை நிரல் ஒரு குறிப்பிட்ட வசதியை அடுத்தப் பதிப்பில் தரும் என அறிவித்து விட்டுப் பல பதிப்புகளுக்குப் பின்னும் அவ்வசதியை வழங்காமலிருத்தல்.

real storage : மெய்ம்மைச்;சேமிப்பகம்;உண்மைச் சேமிப்பகம் : உள்ளபடியான சேமிப்புப் பொறியமைவிலுள்ள உள்முகச் சேமிப்பகம்.

real time : இயல்பு நேரம்;உண்மை நேரம்;நிகழ் நேரம் : ஒரு வணிக அல்லது இயற்பியல் செயல்முறை நடைபெறுகிற உள்ளபடியான நேரத்தின் போது, தரவு செயல்முறைப் படுத்துதல் எத்துணை விரைவாக நடைபெறுகிறதோ அந்த நேரம். இத்தகைய தரவு செய்முறைப்படுத்துதலின் விளைவுகளை அந்தச் செய்முறையை வழிநடத்துவதற்குப் பயன் படுத்தலாம். உலகெங்குமுள்ள பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகங்கள் அனைத்தும் இதனைப் பயன்படுத்துகின்றன. வேதியியல் தொழிலிலும் இந்த இயல்பு நேரம பெரிதும் பயன்படுகிறது.

real-time animation : நிகழ்நேர அசைவூட்டம்.

real time applications : நிகழ்நேரப் பயன்பாடுகள்.

real time clock : நிகழ் நேரக் கடிகாரம் : உண்மைக் காலங்காட்டும் கருவி : கணினியின் செயற்பாடுகளை, வெளியுலகில் நிகழும் நிகழ்வுகளுடன் ஒருங்கிணைப்பதற்காக குறிப்பிட்ட கால இடைவெளிகளில் செய்முறைப் படுத்தியை இடைத்தடுப்பு செய்கிற வன்பொருள். இது பெரும்