பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

real time compression

1220

real time output


பாலும், மனித/கணினி இடை வினையை உள்ளடக்கியதாகும்.

real time compression : இயல்பு நேரச் செறிவாக்கம் : தரவுகளை விரைவாகச் செறிவாக்கம் செய்தலும், செறிவைத் தளர்த்தலும். ஸ்டேக்கர், சூப்பர் ஸ்டோர், டிபிஎல்ஸ் (Dos 6. 0) போன்ற சொந்தக் கணினிப் பொருள்கள், ஒரு செறிவு இயக்கியை உருவாக்குவதற்கு ஒரளவு நிலை வட்டு இடப்பரப்பை ஒதுக்க அனுமதிக்கிறது. அந்த இயக்கியில் செயல்முறை எதனாலும் எழுதப்படும் தரவு எதுவும், மீண்டும் படிக்கப்படும்போது செறிவாக்கம் செய்யப்பட்டு, செறிவுத் தளர்வு செய்யப்படுகிறது.

real time image generation : இயல்பு நேர உருக்காட்சி;நிகழ் நேர உருவாக்கம் : வரிசைமுறை பார்வையாளருக்குச் சரியாகத் தோன்றும் வகையில், விரைவான வேகத்தில் ஒர் உருக்காட்சியை புதிய நிலைக்கு கொணர்ந்து முடிவுறுத்துவதற்குத் தேவைப்படும் கணிப்புகளைச் செய்தல். எடுத்துக் காட்டு வினாடிக்கு 30-60 சுழற்சிகள் என்ற வேகத்திற்குள் பல்லாயிரம் கணிப்புகள் நடைபெறும் வகையில் வான் பயண வேகத்தினைத் தூண்டுதல்.

real time information system : இயல்பு நேரத் தகவல் பொறியமைவு : உரிய தலைமைக்கு கோப்புகளை உடனடியாக நாளது தேதிக்குத் திருத்துவதன் மூலம் அல்லது ஒரு செயற்பாட்டினை அதன் வேண்டுறுத் தப்பட்ட வேகத்தில் இயக்குவதற்குப் போதுமான வேகத்தில் ஒரு கால அளவுக்குள் ஒரு பதிலை உருவாக்குவதன் மூலம், நடவடிக்கைகளுக்குப் பதிலளிக்கிற கணினியமைவு.

real time operating system : இயல்பு நேரச் செயற்பாட்டுப் பொறியமைவு : உட்பாட்டுச் சைகைகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் உடனடியாகப் பதிலளிக்கக்கூடிய தலைமைக் கட்டுப்பாட்டுச் செயல்முறை.

real time operations : இயல்பு நேரச் செயற்பாடுகள் : கணினி செய்திடக்கூடிய, எந்த நேரத்திலும் அல்லாமல், ஒரு குறிப்பிட்ட கணத்தில் நடைபெறுகிற செயல்முறைச் செயற்பாடுகள். திரை உயிரியக்கம், அபாய அறிவிப்புப்பணிகள், எந்திரன்கள் ஆகியவை இந்த இயல்பு நேரச் செயற்பாடுகளைப் பயன் படுத்துகின்றன.

real time output : நிகழ்நேர வெளிப்பாடு;இயல்பு நேர வெளிப்பாடு : தேவையானபோது