பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

real time processing

1221

reasonableness check


ஒரு பொறியமைவிலிருந்து வேறொரு பொறியமைவின் மூலம் அகற்றப்படும் வெளிப்பாட்டுத் தரவுகள்.

real time processing : இயல்பு நேரச்செய்முறைப்படுத்துதல் : தரவுகளைச் செய்முறைப் படுத்துவதற்கான முறை. இதில் தரவுகள், காலாந்தர முறையில் அல்லாமல் உடனடியாகச் செய்முறைப்படுத்தப்படுகின்றன. இது தொகுதிச் செய்முறைப் படுத்துதலிலிருந்து (batch processing) வேறுபட்டது தானியங்கி விரைவுக் காசாளர் பொறி (Automatic Teller Machine) இயல்பு நேரச் செய்முறைப் படுத்துதலைப் பயன்படுத்துகிறது. ஏனென்றால், இதில் பணப்பட்டுவாடா உடனடியாகச் செய்யப்படுதல் வேண்டும். இதுபோன்றே, விமானப் பயணச்சீட்டு முன்பதிவிலும் இயல்பு நேரம் பயன்படுத்தப் படுகிறது. இயல்புநேரச் செய்முறைப்படுத்துதலை நேரடிச் செய்முறைப்படுத்துதல் என்றும் கூறுவர்.

real time processing record : நிகழ்நேரச் செயல்பாட்டு முறைப் பதிவேடு.

real time projects : நிகழ் நேர செயல்திட்டம் நிகழ்நேர திட்டப்பணி.

'real time systems : இயல்பு நேரப் பொறியமைவுகள் : ஏதேனும் செய்முறையின் நேரவரம்புக்குள் தனது பணிகளைச்செய்து முடிக்குமாறு அல்லது தான் உதவிபுரியும் பொறியமைவுடன் இணைந்து ஒரே சமயத்தில் தன் பணிகளை முடிக்குமாறு வேண்டுறுத்தப்படுகிற கணினியமைவு. பொதுவாக இந்தப் பொறியமைவுதான் உதவி புரிகிற பொறியமைவை விட வேகமாகச் செயற்படுதல் வேண்டும்.

real-to-real tape : இயல்புக்கு இயல்பு நாடா : இது ஒருவகைத் துணை நிலை நினைவகம். இது பிளாஸ்டிக் சுருள்களால் வைக்கப்பட்டுள்ள காந்த நாடாவைப் பயன்படுத்துகிறது. இந்த நாடா, முதன்மைப் பொறியமைவுக் கணினிகளில் தொடர்வரிசை அணுகு சாதனமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நாடாவின் அகலம் பொதுவாக 12 மீ. மீ; நீளம் 600 மீ (2, 400 அடி). ஒரு நாடாவின் தரவு அடர்த்தி ஒர் அங்குலத்திற்கு இத்தனை எண்மிகள் (bytes) என்று அளவிடப்படுகிறது. எடுத்துக்காட்டு : 800bpi; 1600bpi.

reasonabteness check : சரி நிலைச் சோதனை : பெரும் பிழை எதுவும் நிகழ்ந்துள்ளதா