பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

reasonable test

1222

recognizing exceptions


என்பதைக் கண்டுபிடிப்பதற்காகச் செய்முறைப்படுத்திய தரவுகளில் சோதனைகள் நடத்துவதற்கான உத்தி. உள்ளிருக்கும் தரவு கோடுகள் மேல்-கீழ் வரம்புகளைக் காட்டுகின்றனவா என்பதை செயல் முறைப்படுத்தும் நிரல்கள் சரிபார்க்கின்றன;தரவுகள் நியாயமாக இல்லை என்றால் அதனைச் சீர்செய்ய நடவடிக்கை மேற்கொள்கின்றன.

reasonable test : சரிநிலைச் சோதனை : ஒரு மதிப்பளவு இயல்பான அல்லது தருக்க முறையான அளவெல்லைக்குள் இருக்கிறதா என்பதை தீர் மானிப்பதற்கான ஒருவகைச் சோதனை. புற ஒலியையும் உட்பாட்டுப் பிழைகளையும் கண்டுபிடிப்பதற்கான மின்னணுச் சைகைகளின்மூலம் இது செய்யப்படுகிறது.

reassembling : மறு செப்பனீடு.

reboot : புத்தியக்கம்;மறு தொடக்கம்;மறு ஆரம்பம் : ஒரு கணினியில் வன்பொருள்/மென்பொருள் செயலிழப்பு ஏற்படும்போது, அதனை எக்கித்தள்ளி மீண்டும் செயற்படுமாறு செய்தல். இது பெரும்பாலும் மனிதர் தலையீட்டின்மூலம் நடைபெறுகிறது.

receive : செய்தி ஏற்பு : செய்தி அனுப்புபவர் அனுப்பும் செய்திகளை வாங்கிக் கொள்ளுதல்.

Receive Only (RO) : ஏற்பு மட்டும் : விசைப்பலகை இல்லாத முனையங்கள் மற்றும் பிற சாதனங்களின் படிப்பதற்கு மட்டுமேயான திறம்பாடுகளைக் குறிக்கும் சொல். இது அனுப்பமட்டும் என்பதிலிருந்து வேறுபட்டது.

receiver : வாங்கி;பெறுனர் : அனுப்புபவரால் அனுப்பப்படும் செய்தியைப் பெறுபவர்.

recharge : னறு மின்னேற்றம்.

recipient : பெறுபவர்;பெறுநர்.

rec. newsgroups : ரெக். நியூஸ் குரூப்ஸ் : யூஸ்நெட் செய்திக்குழுக்களில் rec. படிநிலையில் ஒர் அங்கம். rec என்னும் முன்னொட்டால் குறிக்கப்படும். இத்தகைய செய்திக் குழுக்களில் மனமகிழ் நடவடிக்கைகள், பொழுதுபோக்கு மற்றும் கலை தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெறும்.

recoat : மறுபூச்சு.

recognition, voice : குரல் அறிதல்.

recognizing exceptions : விதி விலக்குக்காணும் செய்முறைகள்.