பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

recompile

1223

recording density


recompile : மறுதொகுப்பு : தவறு கண்டறிந்த பிறகு அல்லது செயல் முறையை வேறொருவகைக் கணினியில் இயக்குவது அவசியமாகிற போது, ஒரு செயல்முறையை மீண்டும் தொகுத்தமைத்தல்.

reconnection : மறு இணைப்பு;மீள் இணைப்பு.

reconstruction : மறு கட்டுமானம்;மறு உருவாக்கம் : ஒரு தரவு தளப் பொறியமைவில், தரவுகள் சீர்குலைக்கப்பட்ட அல்லது அழிந்துபோன பிறகு, அந்தப் பொறியமைவை மீண்டும் அதன் முந்திய நிலைக்குச் சீர்படுத்திக் கொண்டுவருதல்.

record : பதிவேடு;குறிப்பேடு;பதிவு;குறிப்பு;பதிவுக் குறிப்பு : ஒரே அலகாகக் கருதப்படும் தரவுவின் தொடர்புடைய இனங்களின் தொகுதி. ஒரு தரவு தளத்தின் ஒவ்வொரு இனத்தையும் பற்றிய விவரிப்பு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புலங்களைக் கொண்ட ஒரு பதிவேட்டின் மூலம் குறிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டு : ஒர் அகராதியில் அல்லது தொலை பேசி விவரக் குறிப்பேட்டில் அன்றாடம் புதிய இனத்தைச் சேர்த்தல்.

record, addition : சேர்ப்பு ஏடு.

record chain : ஆவணச் சங்கிலி : ஒரு கணினிக் கோப்பிலுள்ள ஒர் உள்முகப்பட்டியலாக ஒருங்கே அமைந்துள்ள ஆவணங்களின் ஒரு தொகுதி. இவை, சங்கிலி அல்லது சுட்டு முனை முகவரி எண்கள் மூலம் தருக்க முறையில் பிணைக்கப்பட்டுள்ளன.

record count : பதிவேடுகளின் எண்ணிக்கை : கணினி ஆவணங்களின் உட்பாடு அல்லது வெளிப்பாடு பற்றிய எண்ணிக்கையின் ஒரு கட்டுப்பாட்டு மொத்தம். ஒரு பதிவுக் கணக்கினை கணினியால் உருவாக்கப்பட்ட கணக்குடன் ஒப்பிட்டுப் பார்த்து தரவுகளை இழக்காமல் பாதுகாக்கலாம்.

record, data : தரவு ஏடு.

record format : ஏட்டு வடிவம்.

record, fixed length : நிலை நீள ஏடு.

record head : பதிவு முனை : நாடாப் பதிவகமுள்ள கணினியில், நாடாவில் தரவுவை எழுதும் சாதனம். சில நாடாக் கணினிகளில் படிக்கும் முனையிலேயே பதிவு முனையும் இணைக்கப்பட்டிருக்கும்.

recording button : பதிவுக் குமிழ், பதிவுப் பொத்தான்.

recording density : செறிவுத் திறன் பதிவு செய்தல் : பதிவு