பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

record number

1225

rectangular coordinate


record number : பதிவேட்டு எண் : ஒவ்வொரு புதிய பதிவேடும் உருவாக்கப்படும் போது அதற்குத் தானாகவே குறித்தளிக்கப்படும் எண். எடுத்துக்காட்டு : சுட்டு எண். இதனைப் பயன்படுத்துபவர் அறிந்திருப்பார்.

records management : பதிவேட்டு மேலாண்மை : ஒர் அமைவனத்தின் ஆவணங்களை உருவாக்குதல், பேணிவருதல், காலாந்திர முறையில் அழித்து விடுதல் போன்ற காப்புப் பணிகளைச் செய்தல்.

record structure : ஏட்டுக் கட்டமைப்பு : ஒர் ஏட்டில் இடம் பெறக்கூடிய புலங்களின் பட்டியல், ஒவ்வொரு புலமும் ஏற்கக்கூடிய மதிப்புகளின் வரையறைகள் உட்பட.

recover : மீட்பு : ஒரு செயலிழப்புக்குப் பிறகு செயல் முறையைத் தொடர்ந்து நிறைவேற்றுதல். ஒரு சிக்கலைச் சமாளித்தல்.

recoverable error : மீட்கத்தக்க பிழை : ஒரு செயல்முறையில் ஏற்படும் பிழையைக் கண்டறிந்து, திருத்தம் செய்து, செயல்முறைச் செயற்பாட்டினைத் தொடரக்கூடிய பிழை.

recovery : மீட்சி;மீட்பு : இழக்கப்பட்ட தரவுவை மீட்டெடுத்தல். கணினியில் பழுதேற்பட்டதால் பிழையாகிப்போன, முரண்பட்டுப்போன தரவுவை சரியாக்குதல். வட்டு அல்லது நாடாவில் முன்பே எடுத்து வைக்கப்பட்ட காப்பு நகலிலிருந்து, இழக்கப்பட்ட தரவு மீட்கப்படுவதையும் குறிக்கும்.

Recreational Software Advisory Council : பொழுதுபோக்கு மென்பொருள் ஆலோசனைக் கழகம் : 1994 ஆம் ஆண்டின் இறுதியில், மென்பொருள் வெளியீட்டாளர் சங்கம் (Software Publishers Association) தலைமையில் ஆறு வணிக அமைப்புகள் இணைந்து உருவாக்கிய ஒரு சுயேச்சையான ஆதாய நோக்கில்லா அமைப்பு.

rectangular coordinate system : செவ்வக ஆயத்தொலைவுப் பொறியமைவு : ஒரு சம தளத்திலுள்ள ஒவ்வொரு புள்ளிக்கும், ஆயத்தொலைவுகள் எனப்படும் இரண்டு எண்களைக் கொடுத்து ஒரு முகவரியை அளிக்கின்ற பொறியமைவு. இதுவும், "கார்ட்டீசியன் ஆயத்தொலைவுப் பொறியமைவு" (Cartesian Coordinate system) என்பதும் ஒன்றே.