பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

redo

1228

redundant code


படுத்த வேண்டிய சூழ்நிலையில், ஒருவர் செய்யும் மாற்றங்கள் புதிய சேர்ப்புகள் நீக்கல்கள் ஆகியவை அடையாளமிட்டுக் குறித்து வைக்கப்படுகின்றன. ஒர் ஆவணம் உருவாக்கப் படுகையில் நிகழும் அனைத்து மாற்றங்களையும் குறித்து வைப்பதே இதன் நோக்கம்.

redo : தவிர்த்தது செய்;திரும்பச் செய் : விட்டதைச் செய். செய்தது தவிர்த்திருப்பின் (undo), தவிர்த்ததை மீண்டும் செய்வதற்கான கட்டளை.

reduce : குறை;அளவு குறை : வரைகலைப் பயனாளர் இடை முகத்தில், பெரும்பாலாகப் பயன்படுத்தப்படும் சாளரத்தின் அளவினைக் குறைத்தல். தலைப்புப் பட்டையில் அதற்கென உரிய பொத்தானை அழுத்த வேண்டும் அல்லது சுட்டியின் குறியை சாளரத்தின் எல்லையில் வைத்து, சுட்டிப் பொத்தானை அழுத்தி விரலை எடுக்காமல் சாளர அகல உயரங்களை மாற்றியமைக்கலாம்.

reduced font : அளவு குறைந்த எழுத்து : சிறிய எழுத்து.

reduction : குறைப்பு : பதிவேடுகளின் நீளத்தைக் குறைப்பதற்காகக் காலிப் புலங்களை ஒழித்தல் அல்லது தேவையற்ற தரவுகளை நீக்குதல் மூலம் கணினிச் சேமிப்பக அளவை மிச்சப்படுத்தும் செய்முறை.

redundance : மிகைமை;மிகையாக்கம் : 1. ஒரு பொறியமைவில் ஒருகூறு தவறாக இயங்கும்போது, அந்தப் பொறியமைவு செயலிழந்து போவதைத் தடுப்பதற்காக ஒரு கூறினை இரட்டிப்பாக்குதல். 2. பல்வேறு கோப்புகளிடையே தரவுகளைத் திரும்ப இடம்பெறச் செய்தல். இது சில சமயம் தேவையாக இருக்கும், ஆனால், பெரும்பாலும் விரும்பத் தக்கதன்று.

redundancy check : மிகைமைச் சரிபார்ப்பு : ஒரு செய்தியைத் தெரிவிப்பதற்குத் தேவைப்படும் குறைந்த எண்ணிக்கையைவிட அதிக அளவில் துண்மிகளை அல்லது எழுத்துகளை மாற்றிச் சரிபார்த்தல். இந்தக் கூடுதல் துண்மிகள் அல்லது எழுத்துகள் சரிபார்க்கும் நோக்கங்களுக்காகத் திட்டமிட்டுச் செருகப்பட்டிருக்கும்.

redundancy code : மிகைமைக் குறிமுறை.

redundant code : மிகைமைக் குறியீடு : கூடுதலான சரிபார்ப்புத் துண்மி கொண்டுள்ள இரும குறியீடிட்ட பதின்ம மதிப்பளவு.