பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

redundant data

1229

reentrant subroutine


redundant data : மிகைத் தரவு : ஒர் அமைவனத்திற்கு இனிமேலும் தேவைப்படாதிருக்கிற தரவு அல்லது அதைவிடத் துல்லியமான அல்லது புதுமையான தரவுகளினால் நீக்கம் செய்யப்பட்ட தரவுகள்.

redundant information : மிகைச்செய்தி விவரம் : ஒரு தரவுவின் சாரம் பல்வேறு வழிகளில் தெரியும் வகையில் தெரியப்படுத்தப்படும் செய்தி.

reel : சுருள்.

reengineer : மறுசிந்தனை;மறுவரையறை : வழக்கமாகப் பின்பற்றிவந்த செயல்முறைகளில், செயல்பாடுகளில் ஒரு மாற்றம் கொண்டு வருவதற்கான மறு சிந்தனை. கணினி அமைப்புகளின் சூழலில் இதன் பொருள், இதுவரை ஆற்றிவந்த பணிகளின் செயல்முறையை மாற்றியமைத்தல்-புதிய தொழில் நுட்பத்தின் பலன்களை முற்றாக நுகரவேண்டும் என்பதே நோக்கம்.

reengineering : மறுசிந்தனை;மறு வரையறுப்பு : மீட்டுருவாக்கம் : 1. ஒரு மென்பொருளைப் பொறுத்தவரை அதன் பலவீனங்களைக் களைந்து கூடுதலான பயன்களைச் சேர்த்து அதனை வலுவுள்ளதாக்குதல். 2. நிறுவன மேலாண்மையைப் பொறுத்தவரை உலகப்பொருளாதாரச் சூழலில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களைச் சமாளிப்பதற்கும் விரி வடைந்து கொண்டே செல்லும் தொழிலாளர் கூட்டத்தைத் திறமையாக மேலாண்மை செய்யவும் தரவு தொழில் நுட்பக் கோட்பாடுகளைக் செயல் முறைப்படுத்துதல்.

reentrant : மறுபதிவு;மீள் நுழை : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட சுதந்திரமான செயல் முறைகளினால் ஒரே சமயத்தில் பயன்படுத்தப்படுகிற ஒரு வாலாயம் தொடர்புடையது.

reentrant code : மறுபதிவுக் குறியீடு : எத்தனை பயனாளர் விரும்பினாலும் அத்தனை பேரும் ஒரே சமயத்தில் பகிர்ந்து கொள்ளக்கூடிய, இணைப்பி உருவாக்கிய எந்திர மொழிச் செயல்முறைகள்.

reentrant subroutine : மறுபதிவுத் துணைவாலாயம் : ஒரு பன்முகச் செயல்முறைப் படுத்தும் பொறியமைவில், பல செயல்முறைகள் பகிர்ந்து கொள்கிற உள்முகச் சேமிப்பகத்தில் ஒரேயொரு படி மட்டுமே இருக்கிற ஒரு துணை வாலாயம்.