பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

reflectance

1231

reflector


reflectance : பிரதிபலிப்பி : ஒளியியல் நுண்ணாய்வில் ஓர் எழுத்துக்குக் குறித்தளிக்கப் பட்டுள்ள மதிப்பளவு அல்லது பின்னணியுடன் ஒப்பிடுவதற் கான மையின் வண்ணம்.

reflectance ink : பிரதிபலிப்பு மை; எதிரொளிர்வு மை : ஒளியியல் நுண்ணாய்வில், ஒரு பிரதிபலிப்புத் திறனுடைய மை. இது, ஒரு குறிப்பிட்ட ஒளியியல் எழுத்துப்படிப்பிக்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய காகிதப் பிரதிபலிப்புத் திறனுக்கு ஏறத்தாழ நெருக்கமாக இருக்கும்.

reflected code : பிரதிபலிப்புக் குறியீடு : 'பழுப்புக் குறியீடு' (grey code) என்பதும் இதுவும் ஒன்றே.

reflection mapping : பிரதிபலிப்பு படிவரைவு : கணினி வரைகலைகளில் ஒரு பொருளின் மீது பிரதிபலிப்புகளைத் தூண்டுகிற ஒர் உத்தி.

reflective liquid-crystal display : பிரதிபலிக்கும் நீர்மப்-படிகக் காட்சி : நீர்மப் படிகக்காட்சியில் ஒரு வகை. படிக்கும் தெளிவை மிகுவிக்க ஒர அல்லது பின்புற ஒளியை பயன்படுத்தாமல், பிரதிபலிக்கும் உள்ளுறை ஒளியைப் பயன்படுத்தும்முறை. ஆனால் இத்தகு காட்சித் திரையை வெளிச்சத்தில் பார்த்தால் தெளிவாக இராது. எனவே அறைக்கு வெளியே திறந்தவெளியில் பயன்படுத்த முடியாது.

reflective routing : பிரதிபலிப்பு திசைவிப்பு : விரிபரப்புப் பிணையங்களில், பிணைய வழங்கன் கணினியின் சுமையைக் குறைக்கும் பொருட்டு தரவுகள் பகிர்ந்தளிக்கப் படுவதுண்டு. ஒரு பிரதிபலிப்பி நிரல் மூலம் இது நிறைவேற்றப்படுகிறது.

reflective spot : பிரதிபலிப்புப் புள்ளி : ஒரு காந்த நாடாவின் இரு முனைகளிலும் வைக்கப்பட்டுள்ள உலோகத் தகடு. இதில் நாடாவில் ஏற்றப் பட்டுள்ள ஒளி, ஒர் ஒளியுணர்வியில் பிரதிபலித்து, நாடா முடிந்து விட்டதைக் குறிக்கிறது.

reflector : பிரதிபலிப்பு : ஒரு பயனாளரிடமிருந்து சமிக்கை கிடைக்கப் பெற்றவுடன் பல பயனாளர்களுக்கு செய்தியை அனுப்பிவைக்கும் ஒரு நிரல். பொதுவகை பிரதிபலிப்பிகளுள் மின்னஞ்சல் பிரதிபலிப்பி ஒன்று.

ஒரு மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றவுடன் தன்னிடமுள்ள பட்டியலிலுள்ள