பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

refresh display cycle

1233

refresh rate


தகைய புதுப்பித்தல் இல்லையெனில் இயங்குநிலைக் குறை கடத்தி ரேம்கள் தன்னிடமுள்ள தரவுவை இழந்துவிடுகின்றன, கம்ப்யூட்டர் இயக்கத்தை நிறுத்தும்போதும், மின்சாரம் துண்டிக்கப்படும்போதும் பதியப்பட்ட தரவு இழக்கப்படுவதைப் போல.

refresh display cycle : புதுத்தூண்டல் காட்சிச் சுழற்சி : ஒர் நெறியச் சாதனத்தில் காட்சியாகக் காட்டப்பட வேண்டிய நெறியங்களின் வழியாக அடுத்தடுத்து நுண்ணாய்வுகள் அல்லது கடவுகள் நடைபெறுவதற்கான நேரம். ஒர் எதிர்மின் கதிர்க் குழலின் முகத்திலுள்ள எரியங்கள், ஒவ்வொரு முறையும் அந்த எரியங்களிலிருந்து வரும் சுடரொளியில் ஏற்படும் ஏற்றத்தாழ்வை அகற்றுவதற்காகப் புதிதாகத் தூண்டிய விரைவு வேகத்தில் ஒவ்வொரு முறையும் நுழைவதன் விளைவாக ஒளிவிடுகின்றன. இதனால், உருக்காட்சி 1/30 அல்லது 1/60 வினாடி நேரத்தில் மறு உருவாக்கம் செய்யப்படுகின்றது.

refreshing : புதுத் தூண்டுதல் : பயன்படுத்தாமலிருக்கும்போது சிதைந்துபோகும் அல்லது மறைந்துபோகும் தகவல்களுக்குப் புத்துயிரூட்டுகிற அல்லது மீட்டாக்கம் செய்கிற செய்முறை. ஒர் எதிர்மின்கதிர்க் குழல் திரையிலுள்ள எரியங்கள், ஒர் எலெக்ட்ரான் கற்றையின் மூலம் இடைவிடாமல் தூண்டப்பட்டு ஒளிரும்படி செய்யப்பட வேண்டும். பொதுவாகச் சுடர் நடுக்கம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக 30-60 Hz என்ற வீதத்தில் உருக்காட்சி மறு உருவாக்கம் செய்யப்பட வேண்டும். அதேபோன்று, இயக்காற்றல் வாய்ந்த நினைவகக் கூறுகள், அவற்றின் உள்ளடக்கங்கள் மறைந்து விடாமலிருக்க, அடிக்கடி அணுகப்படுதல் வேண்டும்.

refresh memory : நினைவகத்தைப் புதுப்பித்தல் : ஒரு வரை கலை விரிவாக்கத்தில் ஒரு குறிப்பிட்ட புள்ளி இருக்கிறதா, அகன்றுவிட்டதா என் பதைக்குறித்துக் காட்டும் மதிப்பளவினைக் கொண்டிருக்கிற, கணினி நினைவகத்திலுள்ள பகுதி. ஒளிர்வு, வண்ணம் பற்றிய தகவல்களையும் இது கொண்டிருக்கும்.

refresh rate : புதுத் தூண்டல் வேக வீதம்;புதுவலுவூட்டுவீதம் : CRT அல்லது இயக்காற்றல் RAM சிப்பு போன்ற சாதனங்கள் வினாடிக்கு எத்தனை முறை புதுவலுவூட்டம் பெறுகின்றன என்ற அளவீடு. கணினி வரை