பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

registry editor

1236

relation


registry editor : பதிவேடு திருத்தி : விண்டோஸ் 95/98 இயக்கமுறைமையில் பதிவேட்டில் உள்ள விவரங்களை பயனாளர் விரும்பியவாறு திருத்த/மாற்ற உதவும் ஒரு பயன்பாடு. regedit என்றும் கட்டளைமூலம் செயல்படுத்தப்படுகிறது.

regression analysis : பின்னோக்கப் பகுப்பாய்வு : இரு தரவுத் தொகுதிகளிடையிலான தொடர்பினை அறுதியிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு புள்ளியியல் உத்தி. எடுத்துக் காட்டாக, தென்னிந்தியாவில், மழைப் பொழிவு அதிகமாக இருந்தால் அரிசி விலை குறைவாக இருக்கும். இது, தென் கடலோரம் நெடுகிலும் கடல்மட்ட வெப்ப நிலைகளிடையே ஒரு தொடர்பினைக் காட்டும். இந்தப் பகுப்பாய்வு, இந்தத் தொடர்புகளை எண்ணளவுப் படுத்தி, எதிர்கால நிகழ்வினை ஊகித்துக்கூற உதவுகிறது.

regression testing : பின்னோக்குச் சோதனை : முன்னதாகச் சரிபார்க்கப்பட்ட ஒரு செயல்முறை விரிவாக்கம் செய்யப்படும்போது அல்லது திருத்தப்படும்போது, அதில் மேற்கொள்ளப்படும் சோதனைகள்.

regression to the norm : உரு மாதிரிப் பின்னிறக்கம் : ஒரு தரவு தொகுதியில் ஒரு மையத் மதிப்பளவினைச் சுற்றி இனங்களைச் செறிவாக்கம் செய்யும் போக்கு. இதில் மிகஅதிகமான மதிப்பளவுகள் கிடைக்கும். ஆனால் நாளடைவில் தரவுத் தொகுதி முழுவதும் அற்ப அளவாகச் சுருங்கிவிடும்.

re-inking : மறு மையிடுதல் : ஒரு துணிவகை அச்சடிப்பி நாடாவை, மீண்டும் பயன்படுத்தும் வகையில் மறு சீரமைத்தல்.

reinstall : மறு நிறுவல்.

reject : ஒதுக்கு.

related files : தொடர்புறு கோப்புகள் : கணக்கு எண் அல்லது பெயர் போன்ற ஒரு பொதுவான அம்சத்தின் பேரில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தரவுக் கோப்புகளை இணைத்தல்.

relation : தொடர்புநிலை;உறவு நிலை : 1. ஒரு குறிப்பிட்ட வரிசை முறையிலுள்ள இரு பொருள்கள் தொடர்புடையனவா இல்லையா என்பதைக் காட்டும் சமநிலை, ஏற்றத் தாழ்வு போன்ற ஒரு பண்பியல்பு.

2. தொடர்நிலை தரவுத்தள உரு மாதிரிகளில் தரவு சேமிப்பகத்தின் அடிப்படை வடிவமான ஒர் அட்டவணை. 3. ஓர்