பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

relational operation

1238

relative path


relational operation : ஒப்பீட்டுச் செயல்பாடு.

relational operator : தொடர்பு நிலை இயக்கி;உறவு இயக்கி;உறவுச் செயல்பாடு;ஒப்பீட்டுக் குறியீடு : இரண்டு மதிப்பளவுகளை ஒப்பிடுவதற்குப் பயன் படுத்தப்படும் குறியீடு. இது, மதிப்பளவு மெய்ம்மையானதாக அல்லது பொய்ம்மையானதாக இருப்பதற்கான நிபந்தனையைக் குறித்துரைக்கிறது.

relational structure : தொடர்பு நிலைக் கட்டமைவு : தரவு இனங்கள் அனைத்தும் ஒரே கோப்பில், ஒரு தருக்கமுறைச் சுட்டுகளின் தொகுதி மூலம் ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ளவாறு அமைக்கப்பட்டுள்ள தரவு தளப்படிவம். இந்த தரவு இனங்களுக்கிடையிலான தொடர்பு நிலைகளை வேண்டியவாறு மாற்றிக்கொள்ளலாம்.

relationships : உறவுமுறைகள்.

relative address : தொடர்பு முகவரி;சார்பு முகவரி : ஒரு குறிப்பிட்ட சேமிப்பு அமைவிடத்தின் முழு முகவரியுடன் சேர்ந்து அமையுமாறு ஒர் ஆதார முகவரியுடன் சேர்க்கப்பட வேண்டிய முகவரி.

relative cell reference : ஒப்பிட்டு சிற்றம் மேற்கோள்;சார்புக்லக் குறிப்பு.

relative coding : தொடர்புக் குறியீட்டு முறை : எந்திர நிரல்களை முகவரிகளுடன் பயன்படுத்தும் குறியீட்டு முறை.

relative coordinate : தொடர்புறு ஆயத்தொலை : பயன்படுத்தப்படும் கடைசி ஆயத்தொலை வினைப்பொறுத்து நிருணயிக்கப்படும் ஒர் ஆயத்தொலை, (5, 10) என்பது, வலப்பக்கம் 5 என்பதையும், மேல் நோக்கி 10 என்பதையும் குறிக்கிறது. (. 5, . 10) என்பது இடப்பக்கம் 5 என்பதையும், கீழ்நோக்கி 10 என்பதையும் குறிக்கிறது.

relative movement : தொடர்பு நகர்வு;சார்பு இயக்கம் : திரையில் ஒரு பொருள் அதன் கடைசிநிலையைப் பொறுத்துப் புதியதொரு நிலைக்கு நகருதல். இது'0'-லிருந்து நகர்வதற்கு மாறானது. "நகர்வு 4, 8" என்பது, வலப்புறமாக 4 அலகுகளும், கடைசி நிலையிலிருந்து மேலே 8 அலகுகளும் நகர்வதாகும். இது "முழு நகர்வு" (Absolute movement) என்பதிலிருந்து வேறுபட்டது.

relative path : சார்புப் பாதை : டாஸ், யூனிக்ஸ் இயக்க முறை மைகளில் பயன்படும் சொற்றொடர். தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் கோப்பகத்தை அடிப்படையாகக் கொண்டு