பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

relocatablae addressea

1241

remarks


புதிய நகலைப் பெறுதல். சிலவேளைகளில் இதன் மூலம் புதுப்பிக்கப்பட்ட தரவுவைப் பெறமுடியும். (எ-டு) நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் ஓட்டவிவரம் அடங்கிய பக்கத்தைப் பார்வையிடல். ஒவ்வொரு மறு ஏற்றத்திலும் மிக அண்மைய ஒட்ட விவரம் கிடைக்கும்.

relocatable addresses : இடர்பெயர்தகு முகவரி;மறுஇட அமைவு செய்யத்தக்க முகவரிகள் : உள்முகச் சேமிப்பகத்தில் எந்த இடத்திலும் அமைந்திடக்கூடிய ஒரு செயல்முறையில் பயன்படுத்தப்படும் முகவரிகள்.

relocatable code : மறுஇட அமைவுக் குறியீடு : நினைவகச் செயல்முறைகள் எங்கு வேண்டுமானாலும் தங்கியிருக்க அனுமதிக்கும் பொறிக்கட்டமைவு, ஒரு தொடர்பு முகவரியாக்கத்தின்படி இது செய்யப்படுகிறது. இதில் வன்பொருள், பொறி அறிவுறுத்தங்களின் முகவரி களை ஒட்ட நேரத்தில் உயர்த்தி விடுகிறது.

relocatable programme : மறு இட அமைவு செய்யத்தக்க செயல்முறை : ஒரு கணினியின் உள்முகச் சேமிப்பகத்தில் கிடைக்கக் கூடிய பகுதி எதிலும் ஏற்றி, நிறைவேற்றுவதற்கு அனுமதிக்கிற, ஒரு வடிவத்தில் அமைந்துள்ள செயல்முறை.

relocate : மறுஇடஅமைவு செய்தல் : கணினிச் சேமிப்பகத்தில் எந்த இடத்திலும் நிறைவேற்றக்கூடிய வகையில் குறியீடிடப்பட்டுள்ள ஒரு செயல் முறையை நகர்த்துதல்.

relocation : மறு இட அமைவு : டாஸ் (DOS) நிறைவேற்றும் ஒரு செய்முறை. ஒரு EXE செயல்முறை ஏற்றப்படும்போது டாஸ் தள முகவரிகளை இழுக்கிறது. அதிலிருந்து மற்ற முகவரிகள் வெளிப்படுத்தப் படுகின்றன. இந்தத்தள முகவரிகளைச் செயல்முறை ஏற்றப்படும்வரை நிலை நிறுத்தமுடியாது. ஏனென்றால், நினைவகத்தில் செயல் முறை இடநிலை அதுவரைத் தெளிவாக இருப்பதில்லை. COM செயல்முறைகளுக்கு மறு இட அமைவு தேவையில்லை.

remark : குறிப்பு வரி.

remarks : குறிப்புரைகள் : கணினிச் செய்முறைப்படுத்தும் நடவடிக்கை எதனையும் செய்யாமல், அதே சமயம் செயல் முறையினைப் புரிந்து கொள்ளுகிற அல்லது மாற்றுகிற முயற்சியில் எதிர்காலப் பயனாளருக்கு உதவக்கூடிய ஒர் ஆதாரமொழிச் செயல்முறையினுள் புகுத்தப்