பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

reprographics

1249

rerun


செயல்முறையை இன்னொரு கணினியில் இயக்கக்கூடிய வகையில் மாற்றுதல்.

reprographics : படிப்பெருக்க வரைகலை : ஆவணங்கள், எழுத்துப் படிகள், படங்கள், ஒவியங்கள், படச்சுருள்கள் ஆகியவற்றைப் படியெடுத்தல், இரட்டைப் படியெடுத்தல் உள்ளடங்கிய தொழில்நுட்பம். ஒளிப்படப் படி, மாற்று அச்சடிப்பு, நுண்படச் சுருளாக்கம், மாற்று இரட்டைப் படியாக்கம் போன்ற உத்திகளும் இதில் அடங்கும்.

request for discussion : விவாதத்துக்கான கோரிக்கை : ஒரு குறிப்பிட்ட முடிவை எடுக்கும் முன்பாக அதற்குரிய விவாதத்துக்கு முறைப்படியான பரிந்துரையை முன்வைப்பது. குறிப்பாக யூஸ்நெட் படிநிலையில் ஒரு புதிய செய்திக் குழுவைச் சேர்க்கலாமா என்பது குறித்து விவாதிக்க வைக்கப்படும் கோரிக்கை. இதுவே முதற்கட்ட நடவடிக்கை. இறுதியில் ஒட்டெடுப்பு நடத்தி முடிவெடுக்கப்படும்.

Request For Proposal (RFP) : முன்மொழிவு வேண்டுகோள் : வன்பொருள்/மென்பொருள் விற்பனையாளர்களுக்கு, பொறியமைவுக் குறிப்பீடுகளுக் கிணங்கியவாறு சாதனங்களையும், மென்பொருள்களையும் முன்மொழியுமாறு வேண்டி அனுப்பப்படும் ஆவணம்.

Request For Quotation (RFQ) : விலைப்புள்ளி வேண்டுகோள் : வன்பொருள்/மென்பொருள் விற்பனையாளர்களுக்கு, சாதனங்களின் விலைகளைக் குறிப்பிட்டு விலைப்புள்ளி அனுப்புமாறு வேண்டி அனுப்பப்படும் ஆவணம்.

request header : வேண்டுதல் தலைப்பு : ஒரு சாதன இயக்கியைக் கட்டுப்படுத்துவதற்கு டாஸ் (DOS) உருவாக்கியுள்ள ஒரு நிலையளவுருத் தொகுதி.

required : கட்டாயத் தேவை : எம்எஸ் அக்செஸில் அட்டவணையில் ஒரு புலத்துக்கான பண்புக் கூறுகளுள் ஒன்று.

requirement list : தேவைப் பட்டியல் : மென்பொருள் என்னென்ன செய்ய வேண்டும் அல்லது அது எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும் என்பதைக் குறித்துரைக்கின்ற, முறையாக எழுதப்பட்ட அறிக்கை.

requirements : தேவைப்பாடுகள்.

rerun : மறுஒட்டம் : ஒரு கணினியில் ஒரு செயல்முறையை