பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

resource leveling

1254

resource type


என்னும் வகையைச் சார்ந்த பல்வேறு மெனுக்களில், ஒரு குறிப்பிட்ட மெனுவைக் குறிக்கும் எண்.

resource leveling : ஆதாரச் சம நிலையாக்கம் : ஆதாரங்களைப் பெரிதும் உகந்த அளவில் பயன்படுத்தும் வகையில் மிதவை நேரத்துடன் நடவடிக்கைகளை அட்டவணைப்படுத்துதல். இதன் மூலம், ஆதாரத் தேவைப் பாடுகளில் ஏற்படும் பெரும் ஏற்றத் தாழ்வுகள் தவிர்க்கப்படுகின்றன.

resource management : ஆதார மேலாண்மை : அடிப்படைச் சேமிப்பகம், துணை நிலைச் சேமிப்பகம், மையச் செயலகம், செய்முறைப் படுத்தும் நேரம், உட்பாட்டு/வெளிப்பாட்டுச் சாதனங்கள் போன்ற கணினிப் பொறியமைவு ஆதாரங்களை, மற்றும் பொறியமைவு மென்பொருள்கள், பயன்பாட்டு மென்பொருள் தொகுதிகள் மூலமாகப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துகிற ஒரு செயற்பாட்டுப் பொறியமைவுச் செயற்பணி.

resouce meter : வளமானி.

Resource Reservation Setup Protocol : வள ஒதுக்கீட்டு அமைப்பு நெறிமுறை : "தேவைக்கேற்ற அலைக்கற்றை" (bandwidth on demand) என்னும் வசதியை அளிப்பதற்கென வடிவமைக்கப்பட்ட ஒரு தகவல் தொடர்பு நெறிமுறை. ஒரு தகவல் பரிமாற்றத்துக்காக குறிப்பிட்ட அளவு அலைக் கற்றை, வழங்கன் கணினியால் ஒதுக்கப்பட வேண்டும் என்று தொலைதூர வாங்கிக் கணினி (receiver) கோரிக்கை வைக்கும். கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதா இல்லையா என்ற தகவலை வழங்கன், தொலை தூர வாங்கிக்குத் தெரிவிக்கும்.

resource sharing : ஆதாரப் பங்கீடு : ஒரு மையச் செயலகத்தை பல பயனாளர்களும், பல புறநிலைச் சாதனங்களும் பகிர்ந்து கொள்ளுதல்.

resource type : வள வகை;வள இனம் : மெக்கின்டோஷ் இயக்க முறைமையில் உள்ள, கட்டமைப்பு மற்றும் செயல்முறை வளங்களுக்கான ஏராளமான இனக்குழுக்களில் ஒன்று. குறிமுறை, எழுத்துரு, சாளரங்கள், உரையாடல் பெட்டிகள், முன் வடிவங்கள், சின்னங்கள், தோரணிகள், சரங்கள், இயக்கிகள், காட்டிகள், நிற அட்டவணைகள், பட்டிகள் போன்றவை இவற்றில் அடங்கும். இவற்றை அடையாளங்காண, குறிமுறைக்கு CODE,