பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

right or hard disks

1261

RISC


right or hard disks : விறைப்பு அல்லது நிலை வட்டுகள் : இது அலுமினியத்தினால் ஆனது;இதன் பதிவுப் பரப்பு, பெரும்பாலும் குரோமியம் ஆக்சைடினால் முலாம் பூசப்பட்டிருக்கும். முன்பு ஒவ்வொரு வட்டும் 2மீமிகு எண்மி திறன் கொண்டிருந்தது. பின்னர் வந்த வட்டுகள் 4 மீமிகு எண்மியலுக்கு மேற்பட்ட சேமிப்புத்திறனைக் கொண்டிருந்தன. செந்திறமான வட்டுகளில் தனித்தனித் தடங்கள் இருக்கும். சில மாதிரிகளில் நிலையான கருள்முறை இருக்கும். இவை மிகக்குறைந்த அணுகு நேரம் உடையவை. மற்ற மாதிரிகளில் நகரும் சுருள் முனைகள் இருக்கும். இவற்றைச் சரியான தடத்தில் செலுத்த வேண்டும்.

right shift : வல நகர்வு;வலது பெயர்வு.

ring : வளையம், வட்ட முறை : தரவுக் கூறுகளை சுழல் முறையில் அமைத்தல்.

ring connected : வளைய இணைப்பு.

rings/loop : வளைய/மடக்கு.

ring network : வளைய பிணையம் : ஒவ்வொரு கணினியும்ட மற்றக் கணினிகளுடன் இணைக்கப்பட்டுள்ள கணினி இணையம். புவியியல் முறையில் கணினிகள் நெருக்கத்தில் இருக்கும்போது இது பயன்படுகிறது.

வளைய பிணையம்

ripple sort : அதிர்வலை வரிசையாக்கம்.

RISC : ரிஸ்க் : சுருக்க நிரல் தொகுதி கணிப்பணி என்று