பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

roam

1263

robustness


roam : நகர்த்தல் : ஒரு காட்சித் திரையைச் சுற்றி ஒரு காட்சிப் பலகணியை நகர்த்துதல்.

robo stick : தன்னியக்கக் கோல் : சறுக்குச் சட்டத்தைக் கையாள் வதற்கும் வரைகலைகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படும் ஒர் உட்பாட்டுச் சாதனம்.

robot : எந்திரன் : மனிதர்களின் மேற்பார்வையின்றி, சுற்றுச் சூழலை உணர்ந்து, உள்ளிட்டுக் கேற்றவாறு சுற்றுச்சூழலை ஒரளவுக்கு நுண்ணறிவோடு மாற்றும் திறன்பெற்ற ஒரு பொறி. பெரும்பாலும், மனித அசைவுகளையொத்த செயல்பாடுடைய எந்திரன்களே வடிவமைக்கப் படுகின்றன. ஆனால் உருவத்தில் அவை மனிதர்களைப்போல படைக்கப் படுவதில்லை. வாகனம் மற்றும் கணினி உற்பத்தி சாலைகளில் எந்திரன்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

robot control language : எந்திரன் கட்டுப்பாட்டு மொழி : எந்திரன்களைக் கட்டுப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட செயல்முறைகளுக்கான மொழி. சான்று : Val;MLரோபோலான்.

Robotic Industries Association (RA) : எந்திர மனிதர் தொழிற் கழகம் : எந்திரன் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்துப் பயன் படுத்துவதற்கான ஒரு தொழில் முறைக் கழகம்;1974இல் நிறுவப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான எந்திரன் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் பயன்படுத்தும் கூட்டமைப்புகள், பணி நிறுவனங்கள், ஆலோசகர்கள், ஆராய்ச்சி நிலையங்கள் அங்கம் பெற்றுள்ளனர். இது எந்திர மனிதன் பற்றிய நடப்புத் தொழில் நுட்பம் பற்றிய தரவுகளையும், புள்ளி விவரங்களையும் சேகரித்து வெளியிடுகிறது.

robotics : எந்திரனியல் : எந்திரன்கள் பற்றிய செயற்கை அறிவாற்றல் துறை. எந்திர மனிதர் வடிவமைப்பு, பயன்பாடு பற்றிய அறிவியல்.

ROBOTLAN : ரோபோலான் : எந்திரன்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் செயல்முறைப்படுத்தும் மொழி.

robustness : வீரியம் : தவறான தரவுகளைச் செலுத்துதல் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளில் நிலைமையைச் சமாளிக்கக் கூடிய அல்லது குறைந்தது அபாயத்தைத் தவிர்க்கக் கூடிய திறன்வாய்ந்த மென்பொருள் செயல்முறையின் அல்லது செயல்முறைத் தொகுதியின்