பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

roll paper

1265

ROM ernulator


பதிவு செய்யப்படும்போது அவற்றைச் சேமித்து வைக்கக்கூடிய இடைத்தடுப்பு நினைவகம்.

roll paper : சுருள் காகிதம் : ஒரு கண்டில் தொடர்ச்சியாகச் சுற்றி வைக்கப்பட்டுள்ள அச்சுக் காகிதம். இது, 'விசிறி மடிப்புக் காகிதம்' (fanfold paper) என்பதிலிருந்து வேறுபட்டது.

roman : ரோமன் : ஒருவகை எழுத்து வடிவம். சாய்ந்த வடிவமாக இல்லாமல் நிமிர்ந்து நிற்கும் வடிவம் கொண்ட எழுத்துரு.

ROM Basic : ரோம் பேசிக் : ரோம் (ROM-Read Only Memory) நினைவகத்தில் பதிந்து வைக்கப்பட்ட பேசிக்மொழி நிரல் மாற்றி (Interpreter) யைக் குறிக்கும். கணியை இயக்கியவுடன் பேசிக் மொழி நிரலை எழுதி இயக்கலாம். வட்டு அல்லது நாடாவிலிருந்து பேசிக் மென்பொருளை நினைவகத்தில் ஏற்ற வேண்டியதில்லை. தொலைக்காட்சிப் பெட்டியுடன் இணைத்து இயக்கக்கூடிய தொடக்ககால வீட்டுக் கணினி (Home Computer) களில் ரோம் பேசிக் இணைக்கப் பட்டிருந்தது.

ROM card : ரோம் அட்டை : அச்சுப்பொறிக்கான சில எழுத்துருக்கள் அல்லது சில நிரல்கள் அல்லது சில விளையாட்டுகள் அல்லது பிற தரவுகள் பதியப்பட்ட ரோம் (ROM) நினைவகச் சிப்புகள் பொருத்தப்பட்ட ஒரு செருகு அட்டை. ரோம் அட்டை, ஒரு பற்று அட்டை (Credit card) யின் அளவில் ஆனால் அதை விடப் பலமடங்கு தடிமனாக இருக்கும். ஒருங்கிணைப்பு மின்சுற்று அட்டைகளில் நேரடியாகத் தரவுகள் சேமிக்கப் பட்டிருக்கும்.

ROM cartridge : ரோம் பொதியுறை : ரோம் அட்டை (ROM card) ஒரு பிளாஸ்டிக் பொதியுறையில் இடப்பட்டு, இணைப்புமுனைகள் ஒரு விளிம்பில் வெளித்தெரிந்து கொண்டிருக்கும். இதனை அச்சுப்பொறி, கணினி, விளையாட்டுக் கருவி அல்லது பிற சாதனத்தில் எளிதாகப் பொருத்த முடியும். தொலைக் காட்சிப் பெட்டியுடன் இணைத்து விளையாடக்கூடிய பெரும்பாலான ஒளிக்காட்சி விளையாட்டுகள் (Video games) இதுபோன்ற ரோம் பொதியுறைகளில் கிடைக்கின்றன.

ROM chips : படிக்கமட்டுமான நினைவுப் பதிப்பி சிப்பு.

Rom emulator : ரோம் மாதிரி;ரோம் போலிகை : ஒர் இலக்குக்