பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rounding

1269

routing function


ளின் விற்பனை சதவீதத்தை தனித்தனியே முழுமையாக்கிக் கூட்டும்போது, சிலவேளைகளில் மொத்த சதவீதம் 99 அல்லது 101 வர வாய்ப்புண்டு.

rounding:முழு எண்ணாக்குதல்;தோராயமாக்கல்:ஒர் எண்னில் மிகச்சொற்பமான பின்னப் பகுதியை விட்டு விட்டு,அந்த எண்ணை அதற்கு மிக நெருக்கமான எண்ணுக்கு முழுமையாக்குதல்.

round off error:தோராயமாக்கல் பிழை.

round robin:சுழற்சி அட்டவணை;தொடர் சுழல்:சாதனம் அல்லது செய்முறை ஒவ்வொன்றின் முடிவில் ஒரு குறிப்பிட்ட சுழற்சி வருமாறு அட்டவணைப்படுத்தும் முறை.

round the clock:முழு நேரமும்;நாள் முழுதும்.

round trip time:வட்ட அடைவு நேரம்;சுழற்சி அடைவு காலம்.

routable protocol:திசைவிப்பு நெறிமுறை:பிணைய முகவரி அல்லது சாதன முகவரி மூலமாக ஒரு கணினிப் பிணையத்திலிருந்து இன்னொரு பிணை யத்துக்குத் தகவலைத் திசைப்படுத்தப் பயன்படும் தகவல் தொடர்பு நெறிமுறை. டீசிபீ/ஐ.பீ. இத்தகு நெறிமுறைக்கு ஒர் எடுத்துக்காட்டு ஆகும்.

router:திசைவி;வழிச்செலுத்தி;வழிப்படுத்தி:இணையப்(இன்டர்நெட்) போக்குவரத்து தனது இலக்கினை அடைவதற்கு எந்தப்பாதையில் செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்யும் கணினி. ஒரு வழிச் செலுத்தி,தனது உள்முக இணையத்தின் உள்ளே அல்லது வெளியே போக்குவரத்தினைக் கட்டுப்படுத்துவதற்கு,இணையத் தொகுதிகளை வடிகட்டிக் கொள்ளவும் முடியும்.

routine:வாலாயம்;நிரல்;வழமை:ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வதற்கான ஒரு குறுகிய செயல்முறைக் குறியீட்டுத் தொகுதி. முக்கியமாக இணைப்பு மொழிச் செயல் முறைகளில் பயன்படுத்தப்படு கிறது.சிலசமயம்,செயல் முறையை(Programme)குறிக்கவும் பயன்படுகிறது. -

routine,end of file:கோப்பு ஈற்று நிரல்கூறு.

routing:செல்வழிப்படுத்துதல்:ஒரு செய்தியை அளிப்பதற்காக ஒரு பாதையினைக் குறித்தளித்தல்.

routing function:குறைசெயல் நிரல் கூறு.