பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ruggedized computer

1272

run


ஒருவர் சுக்கான் அசைவுகளை உள்ளீடு செய்வதற்கு வசதியாக அமைந்துள்ள, ஓர் இணை (pair) மிதிகட்டைகள் அடங்கிய ஒரு சாதனம். இது பெரும்பாலும் ஒரு விசைப்பிடி (Joystick) யுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படும்.

ruggedized computer : கடுஞ் சூழல் கணினி : ஒரு விண் வெளிக்கலம், ஒர் ஏவுகணை, ஒரு கப்பல், ஒரு நீர் மூழ்கிக் கப்பல், ஒரு பீரங்கி, ஒர் உழவுச் சாதனம் போன்ற தனிப்பட்ட சூழல்களில் அமைத்திடும் வகையில் வடிவமைக்கப்பட்ட கணினி.

rule : விதிமுறை;விதி : ஒரு மெய்க்கோளின் வடிவத்தை உருவாக்கி, ஒரு முடிவினைச் செய்கிற அறிக்கைகள். இந்த முடிவுகள், 'என்றால்' (IF) என்ற நிபந்தனையும், 'பின்னர்' என்ற முடிவினையும் கொண்ட விதி முறைகளாக இருக்கும்.

rule based education : விதி வழிக் கல்வி.

rule-based knowledge : விதி முறை சார்ந்த தரவு : விதி முறைகள் வடிவிலும், செயலறிக்கைகளிலும் அமைந்துள்ள தரவு.

ruler : அடிக்கோல், வரைகோல் : சொல்செயலி போன்ற பயன்பாட்டு நிரல்களில் திரையில் தோற்றமளிக்கின்ற, அங்குலம் அல்லது சென்டி மீட்டர்களில் (அல்லது பிற அலகுகளில்) அளவு குறிக்கப்பட்ட வரை கோல். இது பெரும்பாலும் ஒரு வரியின் நீளம், தத்தல் (tab) அமைவுகள், பத்தி உள்தள்ளிடம் (paragraph indent) தொடங்கிடங்களைத் தீர்மானிக்க உதவும். விசைப் பலகை அல்லது சுட்டியைப் பயன்படுத்தி தத்தல் நிறுத்தங்களை (tab stops) இதன் மீது உருவாக்க, நீக்க, மாற்றியமைக்க முடியும்.

ruler line : வரைகோல் கோடு;வரைகோடு : வாசகத்தையும் வரைகலைகளையும் திட்டப்படுத்திக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் வரைகலை வரையுரு.

rules-based deduction : விதிதரு அனுமானம் : பொறியமைவுக்கும் பயன்படுத்துவோருக்கு மிடையிலான உரையாடலை வழிச் செலுத்துகிற எளிய விதிகளின் தொகுதியான குறித்துரைக்கப்படும் தரவுகளிலிருந்து முடிவுகளைப் பெறுவதற்கான உத்தி.

run : ஓட்டுதல் : இயக்குதல் : ஒரு கணினியில், குறிப்பிட்ட தரவு தொகுதியினைக் கொண்டு, ஒரு செயல்முறையை ஒற்றையாக அல்லது தொடர்ச்சியாக நிறைவேற்றுதல்.