பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

run under

1275

RXD


1. இயக்குவதற்குத் தயாரான நிலையில் இருக்கும் நிரல் தொகுப்பு. பொதுவாக, நிரல் குறிமுறை (எந்திர மொழிக்கு) மொழிமாற்றப்பட்டு, பிழைகள் களையப்பட்டு எவ்வகையான தரவு தொகுதிகளுக்கும் சரியாகச் செயல்படும்வண்ணம் தயார் நிலையில் வைக்கப்படும் தொகுப்பு. 2. ஒரு முழுமையான மென்பொருள் தொகுப்பில் இருக்கவேண்டிய அனைத்து வசதிகளையும் தராமல், ஒரு சில வசதிகளுடன் மட்டுமே வெளியிடப்படும் ஒரு சிறப்பு வெளியீடு.

run under : கீழோட்டம் : ஓர் உயர்நிலைச் செயல்முறையின் கட்டுப்பாட்டின்கீழ் ஒடுதல். இது'உச்சி மேலோட்டம்' (Run on top of) என்பதிலிருந்து வேறுபட்டது.

run unit : ஒட்ட அலகு : ஒன்று சேர்த்து நிறைவேற்றப்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொருள் செயல்முறைகள். எடுத்துக்காட்டு : COBOL;PL/

run user : ஒட்டப் பயனாளர் : தற்போது நிறைவேற்றிவரும் விரைவுப் பட்டியலிலுள்ள தோற்றநிலைப் பொறி.

run web querry : வலை வினவல் இயக்கு.

. rw : ஆர்டபிள்யூ : ஒர் இணைய தள முகவரி, ருவாண்டா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

RW : ஆர்/ட்பிள்யூ : படி/எழுத்து நினைவகம்.

RXD : ஆர்எக்ஸ்டி : தரவுகளை பெறுதல் (Receive Data) என்பதன் சுருக்கம். தரவு பரிமாற்றத்தில் நேரியல் (serial) முறையில் ஒரு சாதனத்திலிருந்து இன்னொரு சாதனம் தரவுவைப் பெறும் தடம். (எ-டு) இணக்கியிலிருந்து கணினிக்குச் செல்லும் தரவு, ஆர்எஸ் -232-சி இணைப்புகளில் மூன்றாவது பின்னில் பெறப்படுகிறது.