பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

. sa

1276

sag


S

.sa : எஸ்ஏ : ஒர் இணைய தள முகவரி. சவூதி அரேபியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

SAA (System Appplication Architecture) : எஸ்ஏஏ (பொறியமைவுப் பயன்பாட்டுக் கட்டிடக் கலை) : இது, ஒரு வகை IBM தர அளவுகளின் தொகுதி. 1987இல் அறிமுகப்படுத்தப்பட்டது. நுண் கணினிமுதல் முதன்மைப் பொறியமைவு வரை IBMஇன் அனைத்துக் கணினிகளிடையிலும் தொடர்ச்சியான இடை முகப்புகளை இது ஏற்படுத்துகிறது. பயன்படுத்துவோர் இடைமுகப்புகள், செயல் முறைப்படுத்தும் இடை முகப்புகள், செய்தித்தொடர்பு மரபுகள் ஆகியவற்றினாலானது.

sabermetrician : புள்ளியியல்வாதி : புள்ளிவிவர வல்லுநர்களைக் குறிக்கும் வழக்குச்சொல். இவர் விளையாட்டு அணிகள் மற்றும் விளையாட்டு வீரர்களின் எதிர்காலச் சாதனைகளை ஊகித்தறியக் கணினிகளைப் பயன்படுத்துபவர்.

Sad Mac : வருத்த மேக் : சோக மேக் ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகள் இயக்கப்படும்போது தொடக்கநிலைப் பரிசோதனைகளில் தோல்வியடைந்தால் கிடைக்கும் பிழைக் குறிப்பு. ஒரு சோகமான முகம் கொண்ட மெக்கின்டோஷ் படம் அடியில் ஒரு பிழைச் செய்தியுடன் தோற்றமளிக்கும்.

safe mode : தீங்கிலாப் பாங்கு; பாதுகாப்பு பாங்கு : விண்டோஸ் 95/98 இயக்க முறைமைகளில் ஒரு வகை இயக்கப் பாங்கு. பெரும்பாலான புறச்சாதனங்கள் துண்டிக்கப்பட்டு, பெரும்பாலான இயக்கி நிரல்கள் நினைவகத்தில் ஏற்றப்படாமல் கணினியை இயக்கும் முறை. இதன் மூலம் பயனாளர் தன் கணினியில் ஏற்பட்டுள்ள சிக்கலைக் கண்டறிந்து சரி செய்துகொள்ள முடியும். பணி முடித்து முறைப்படி கணினி இயக்கத்தை நிறுத்தாவிட்டாலும், வேறுசில காரணங்களினால் கணினி இயக்கம்பெற முடியாமல் போகும்போதும் இவ்வாறு நிகழும்.

sag : மின்னழுத்த வீழ்ச்சி : மின் விசை ஆதாரத்திலிருந்து வரும் மின்னழுத்தம் தற்காலிகமாக வீழ்ச்சியடைதல். இது,