பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

SATAN

1279

Saturate


 நிறுவனங்கள் 1981இல் தயாரித்த புறநிலை இடைமுகப்புகள். இது 1986இல் ஏஎன்எஸ்ஐ மற்றும் எஸ்சிஎஸ்ஐ தரஅளவுகளுடன் உருவாக்கப்பட்டது.

SATAN (System Administrator's Tools for Analyzing Networks) : சாட்டன் : பிணையங்களைப் பகுப்பாய்வு செய்வதற்கான பொறியமைவு நிருவாகியின் சாதனம். இது, பெரிதும் கவலையளிக்கும் ஒரு நிகழ்வுக்கான பாதுகாப்புச் சாதனம். இது இன்றும் பயன்படுகிறது.

satellite : செயற்கைக்கோள்; துணைக்கோள் செய்தித்தொடர்புச் சைகைகளை நெடுந் தூரம் அஞ்சல் செய்யக்கூடிய, பூமியைச் சுற்றிவரும் சாதனம்.

satellite channel : செயற்கைக்கோள் அலைவரிசை; துணைக்கோள் அலைவரிசை : செயற்கைக்கோள், , அனுப்பீட்டுக்காகப் பயன்படுத்தப்படும் ஊர்தி அலைவெண்.

satellite communications : செயற்கைக்கோள் செய்தித் தொடர்பு; துணைக்கோள் செய்தித்தொடர்பு : உலகெங்கும் தகவல்களை அனுப்புவதற்காக சுழன்றுவரும் நுண்ணலை அஞ்சல்களைப் பயன்படுத்துதல்.


satellite computer : கிளைக்கணினி; துணைக்கோள் கணினி : 1. கூடுதல் கணினி. இது பொதுவாகச் சிறிய அளவில் இருக்கும். இது பெரிய கணினிப் பொறியமைவுக்கு உதவிகரமாக இருக்கும். இது கீழ்நிலை செயற்பணிகளைச் செய்தால், செய்முறைப்படுத்துதல் சிக்கனமாக இருக்கும். 2. ஒரு தொடர்பற்ற துணைக் கணினி.

satellite dish antennae : செயற்கைக்கோள் வட்டில் வானலை வாங்கி : இது ஒரு பிரதிபலிப்பி. இதன் மேற்பரப்பு ஒரு கோளம் போன்று உட்குழிவாக இருக்கும். இது செயற்கைக்கோள்களைக் கையாள்வதற்கு வட்டில் வானலை வாங்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.

satellite link : செயற்கைக்கோள் இணைப்பு : பூமியிலிருந்து ஒரு செய்தித்தொடர்புச் செயற்கைக்கோளுக்குச் சென்று மீண்டும் பூமிக்குத் திரும்பி வரும் சைகை. இது, தரைவழி இணைப்புக்கு மாறுபட்டது.

satellite orbit : செயற்கைக்கோள் சுற்றுப்பாதை : செயற்கைக் கோள் சுற்றிவருகிற சுற்றுப்பாதை.

Saturate : பூரிதமாக்குதல்; திகட்டுதல் : எந்த அளவு