பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

SCO open desktop

1288

scratch file


மென்பொருள் செயல் முறையின் கட்டுப்பாட்டுப் பரப்பெல்லை. 1. ஊசல் மானி, பொதுக்காட்சி முனையம் போன்றவற்றில் பயன்படுத்தப் படும் CRT வகைத் திரை. 2. செயல்முறைப்படுத்துவதில், ஒரு செயல்முறைக்குள் உள்ள மாறியல் உருக்களின் காட்சித் திறன். 3. தரவுத் தளத்தில் "அடுத்த 50 ", "கோப்பு முடிவு வரையி லான நடப்புப் பதிவு" என்பன போன்ற பல்வேறு பதிவுகள்.

SCO open desktop : ஸ்கோ திறந்தநிலை மேசைப்பொறி யமைவு : 386-களுக்கான பலர் பயன்படுத்தும், உள்ளபடியான நினைவக வரைபடச் செயற் பாட்டுப் பொறியமைவு. UNIX, XENIX, DOS, X-பலகணிப் (விண்டோஸ்) பயன்பாடுகள் ஆகியவற்றை இயக்கும் SCO-சி லிருந்து வெளியிடப்பட்டது.

SCR : எஸ். சி. ஆர் : சிலிக்கன் கட்டுப்பாட்டு மின்மாற்றுக் கருவி என்று பொருள்படும். ‘Silicon Controlled Rectifier' என்ற ஆங்கிலத் தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது பெரு மளவு நேர்மின்னோட்டத்தை அல்லது மின்னழுத்தத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படும் ஒரு மின்கடத்தாச் சாதனம். இதன் இயல்புகள், பழைய வெற்றிடக் குழல் தைராட்ரானைப் போன்றவை. எனவே, இதனைச் சிலசமயம் "தைரிஸ்டர் " (thyristor) என அழைக்கின்றனர்

scrambler : உந்தியேறு கருவி : பூட்டு விசைக்காகத் தரவுகளைக் குறியீடுகளாக்குவதற்கான சாதனம் அல்லது மென்பொருள் செயல் முறை.

scrambling : உந்தி ஏறுதல் : மறை நீக்கம் செய்ய முடியாத வாறு தரவுகளைக்

குறியீடாக்குதல்.

scrap : துண்டு; துணுக்கு : கணினித் தரவு சேமிப்பில், வேறிடம் நகர்த்தவோ,

நகலெடுக்கவோ, அழிக்கவோ குறிக்கப்பட்டுள்ள விவரங்கள் அடங்கிய ஒரு பயன்பாடு அல்லது ஒரு முறைமைக் கோப்பு.

scrapbook : ஒட்டுப்புத்தகம்; கிறுக்கும் நூல் : வரைவு நூல் : ஆவணங்களில் அடிக்கடிப் பயன்படுத்துவதற்காக வாசகங்களையும் படங்களையும் சேமித்து வைக்கும் பணி.

scratch : கீறு; விரைவாக எழுது : நினைவகத்திலிருந்து தகவலை நீக்குதல்.

scratch file : நீக்கக் கோப்பு : கீறல் கோப்பு : விரைவெழுத்துக் கோப்பு : ஒரு துணைச்சேமிப்புச்