பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

search criteria

1296

seat2



search criteria : தேடு நிபந்தனை; தேடல் கட்டுப்பாட்டு விதி : ஒரு தரவுத் தளத்தில் குறிப்பிட்ட தரவு மதிப்புகளைத் தேடிக் கண்டறிய தேடுபொறி பயன்படுத்தும் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள். (எ-டு) ஒர் அலுவலகப் பணியாளர் தரவுக் கோப்பில் 10, 000 ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறும் பெண் அலுவலர்களின் பெயர், பணிப்பொறுப்புகளைக் கண்டறிதல். இங்கே "pay> 10, 000 And Sex is Female" என்பது தேடு நிபந்தனை.


search engine : தேடு பொறி : இணையத்தில் (Internet) நாம் விரும்பும் தரவுவை தேடித் தரும் மென்பொருள்.


searching word : தேடும் சொல்.


search key : தேடும் விசைப்பலகை விரற்கட்டை; தேடும் விசை; தேடு சாவி : ஒரு தேடுதலை நடத்தும் நோக்கத்திற்காக ஒவ்வொரு இனத்தின் குறிப்பிட்ட பகுதிகளுடன் ஒப்பிடப் படும் தரவுகள்.


search memory : தேடல் நினைவகம்.


search memory associative storage : தேடல் நினைவக தொடர்புறு சேமிப்பகம்.


search string : தேடு சரம் : தரவுத் தளத்தில் தேடப்படுகின்ற ஒர் எழுத்துச்சரம். பெரும் பாலும் அது ஒர் உரைச்சரமாக இருக்கலாம்.


search the web : இணையத்தில் தேடு. -


search time : தேடல் நேரம்.


seasonally adjusted : பருவ முறைச் சரியமைவு : முந்திய போக்குகளை மறைக்கிற அல்லது மாற்றமைவு செய்கிற பருவ முறைக் காரணிகளை அனுமதிப்பதற்குச் சரியமைவு செய்யப்பட்ட ஒரு தரவுத் தொகுதியை விவரிக்கப் பயன் படுத்தப்படும் ஒரு சொற்றொடர்.


seat1 : இருக்கை1 : இருக்கை அடிப்படையிலான மென் பொருள் உரிமம் வழங்கும் முறையில் ஒரு பணி நிலையம் அல்லது ஒரு கணினியைக் குறிக்கிறது. அதாவது ஒரு கணினிக்கென வாங்கப்படும் ஒரு மென்பொருள் ஒரு கணினியில் மட்டுமே பயன்படுத்தப் பட வேண்டும்.


seat2 : இருக்கை2 : ஒரு செருகு வாய்க்குள் செருகப்படும் ஒற்றை உள்ளக நினைவகக் கூறு (Single inline Memory Module) ஒன்றாக அமர்ந்து கொள்வது போல, ஒரு கணினியில்