பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

second

1297

second generation

அல்லது சேர்ந்திணைந்த கருவி களில் ஒரு சிறிய வன்பொருள் உறுப்பை முழுதுமாகச் செருகி சரியாக நிலை நிறுத்துதல்.

second : வினாடி; நொடி : மெட்ரிக் முறையில் கால அள வின் அடிப்படை அலகு. பழக்க மான ஆங்கில முறையில் பயன் படுத்தப்படுகிறது.

secondary channel : துணை நிலை அலைவரிசை; செய்தித் தொடர்களில், முதன்மை அலை வரிசையிலிருந்து பெறப்பட்ட ஒரு துணை அலைவரிசை. இது, குறை கண்டறிய அல்லது மேற் பார்வை நோக்கங்களுக் காகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இது தரவு செய்தி களைக் கொண்டு செல்வதில்லை

secondary data : துணை நிலைத் தரவு : இது மற்றொரு நோக்கத் திற்காக ஏற்கெனவே சேகரிக்கப் பட்டது. இப்போது ஒரு தரவு ஆதாரமாகப் பயன்படுத்தப்படு வது. கட்டுரைகள், செய்தியிதழ் செய்திகள் போன்றவற்றி லிருந்து சேகரிக்கப்பட்ட தரவு கள் இதில் அடங்கும்

secondary index : துணை நிலைத் வரிசை முறை : ஒரு தரவு கோப்புக்காக வைத்துவரப்படும் வரிசை முறை. ஆனால், கோப்பின் தற்போதைய செய்முறைப் படுத்தும் வரிசையைக் கட்டுப் படுத்த இது பயன்படுத்தப்படு வதில்லை .

secondary key : துணை விரற் கட்டை; இரண்டாம் நிலை விசை ; துணைச் சாவி ; ஒரு கோப்பிலுள்ள பதிவேடுகளை அணுகுவதற்குப் பயன்படுத் தப்படும் புலம். இது தனிச் சிறப்பானதாக இருக்க வேண்டி யதில்லை .

secondary memory : துணை நிலை நினைவகம் :

secondary service provider : துணை நிலைச் சேவை வழங்கு நர் : வலைத் தரவுகளை வழங்கு கின்ற, ஆனால் நேரடியான இணைய இணைப்பை வழங் காத ஓர் இணையச் சேவை வழங்கும் நிறுவனம்.

secondary storage : துணை நிலைச் சேமிப்பகம் : கணி னியில் குறிப்பிலா அணுகு நினைவகம் (RAM) தவிர பிற தரவு சேமிப்பு ஊடகங்கள், குறிப்பாக நாடா அல்லது வட்டினைக் குறிக்கும்

secondary storage device : துணைநிலைச் சேமிப்புச் சாதனம்.

second generation computers : இரண்டாம் தலைமுறைக்