பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

secure wide area network

1300

security programmes


நிகழ்நிலைத் தகவல் பரிமாற்றங் களில் பாதுகாப்பான செருகு வாய் அடுக்கு (SSL-Secure Sockets Layer), பாதுகாப்பான ஹெச்டீ டீd, (S-HTTP) ஆகிய நெறி முறைகளைப் பயன்படுத்துதல்.

secure wide area network : பாதுகாப்பான விரிபரப்புப் பிணையம் : ஒரு பொதுப் பிணையத்தில் (இணையம் போன்ற) தகவல் பரிமாற்றங் களை அத்துமீறி நுழைபவர் களின் குறிக்கீட்டிலிருந்து தடுக்க, மறையாக்கம் (encryption), சான்றுறுதி (authorisation), உறுதிச்சான்று (Authenti- cation) போன்ற பாதுகாப்பு நட வடிக்கைகளை மேற்கொண்டு தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும் கணினித் தொகுதி.

Security : பாதுகாப்பு : தீங்கு அல்லது இழப்பிலிருந்து கணினி அமைப்பையும் அதிலுள்ள தரவுவையையும் காத்தல். பெரும் பாலும் பலர் பயன்படுத்தும் கணினி அமைப்புகளில், தகவல் தொடர்புத் தடங்களில் இணைக் கப்பட்டுள்ள கணினிகளில் பாதுகாப்புக்கு அதிக முக்கியத் துவம் கொடுக்கப்படுகிறது. ஏனெனில் இதுபோன்ற கணினி அமைப்புகளில் அனுமதி யில்லாத நபர்கள் அத்துமீறி நுழைய அதிக வாய்ப்புள்ளது.

security control : காப்புக் கட்டுப்பாடு.

security files : காப்புக் கோப்பு கள்; பாதுகாப்புக் கோப்புகள் : முக்கியமானதும் இன்றியமை யாததுமான தகவல்களுக்காக துணை யாதரவுக் கோப்புகள்.

Security log : பாதுகாப்புப் பதிகை : தீச்சுவர் அல்லது பிற பாதுகாப்பு சாதனங்களினால் உருவாக்கப்படும் ஒரு பதிகை. அத்துமீறி நுழைய முயலுதல் போன்ற பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கின்ற நிகழ்வு களின் பட்டியல் மற்றும் அது போன்ற நடவடிக்கைகளில் ஈடு பட்ட பயனாளர்களின் பெயர் கள் அப்பதிகையில் பதிவாகி யிருக்கும்.

security monitor : பாதுகாப்புக் கண்காணிப்பி : ஒரு கணினிப் பொறியமைவின் பயன் பாட்டைக் கண்காணித்து, அதன் ஆதாரங்களை அனுமதியின்றி, மோசடியாக, அழிக்கும் வகை யில் பயன்படுத்துவதிலிருந்து பாதுகாக்கும் ஒரு மென் பொருள் தொகுதி.

security programmes : காப்புச் செயல்முறை : பாதுகாப்பு நிரல் தொடர்; காப்புநிரல் : கோப்பு களிலுள்ள தரவுகளை அணுகு வதைக் கட்டுப்படுத்தி, முனை