பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1301


security specialist

1301

segment, data

யங்களையும், பிற சாதனங்களையும் பயன்படுத்த அனுமதியளிக்கிற செயல்முறை.

security specialist : காப்பளிப்பு வல்லுநர், பாதுகாப்பு வல்லுநர் : கணினி மையத்தின் பாதுகாப்புக்கும், தரவு ஆதாரங்களின் தருக்கமுறைப் பாதுகாப்புக்கும் பொறுப்பானவர்கள்.

seed : வித்து; விதை : மூல எண் : போலிக் குறிப்பின்மை எண் உருவாக்கியைத் தொடங்குவதற்குப் பயன்படுத்தப்படும் மாறிலி. முதல் எண்ணை உருவாக்கப் பயன்படுகிறது. பின்வரும் எண்கள் அனைத்தும் முந்திய பலன்களை அடிப்படையாகக் கொண்டவை.

seek : தேடு; கண்டறி; நாடல் : ஒரு நேரடி அணுகுச் சாதனத்தை ஒரு குறிப்பிட்ட அமைவிடத்தில் நிலைப்படுத்துவதற்கான அணுகுச் செயல்முறை.

seek area : தேடு பரப்பு : நாடும் பரப்பு.

seek time : கண்டறியும் நேரம்; தேடு காலம் : ஒரு நேரடி அணுகு சேமிப்புச் சாதனத்தின் அணுகு செயல்முறையினை ஒரு குறிப்பிட்டநிலையில் நிலைப்படுத்துவதற்குத் தேவைப்படும் நேரம். எடுத்துக்காட்டு : படிப்பு/ எழுதுத் தலைப்பினை ஒர் இயக்கியை வட்டின் குறிப்பிட்ட தடத்தின்மீது நிலைப்படுத்துவதற்குத் தேவைப்படும் கால அளவு.

segment : வெட்டுக் கூறு : பிரிவு; பகுதி : 1. ஒரு செயல் முறையைப் பல கூறுகளாகப் பகுத்து, கூறுகள் உள்முகச் சேமிப்பிலும், மற்றக் கூறுகள் துணைச் சேமிப்பிலும் தங்கியிருக்கும்படி செய்தல். ஒவ்வொரு கூறிலும், மற்றொரு கூறுக்குத் தாவுவதற்கான அல்லது மற்றொரு கூறினை உள்முகச் சேமிப்புக்கு வரவழைப்பதற்கான நிரல்கள் அடங்கியிருக்கும். 2. ஒரு மேல் நிலைச் செயல் முறையை நிறைவேற்றும்போது ஒரு தருக்க முறை அலகாக ஏற்றக்கூடிய மிகச்சிறிய செயல்முறை அலகு. 3. தொலைத்தொடர்புக் களத்தைப் பொறுத்தவரையில், குறிப்பிட்ட அளவுள்ள இடைத்தடுப்பில் அடக்கக்கூடிய ஒரு செய்தியின் பகுதி.

segmentation : வெட்டுக் கூறாக்குதல்; பிரித்தல்; பகுதியாக்கல் : கணினிச் செயல்முறையினைத் தருக்கமுறை மாறியல் நீட்சிப் பகுதிகளாகப் பகுப்பதற்கான உத்தி.

segment, data : தரவுத் துண்டம்.