பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

self correcting code

1305

self-validating code


தானே ஈடுகட்டும் குறியீடு : தன்வயத்திருத்துக் குறிமானம் : எடையேற்றிய இரும எண் ஒன்றின் குறைநிரப்பானது, பதின்மக் குறிமானத்தில் எண் ஒன்பதின் குறை நிரப்பாக இருக்கும் பண்பினைக் கொண்ட குறியீடு.

self correcting code : தானே திருத்தும் குறியீடு : ஒரு எண் மானக் குறியீட்டு முறை. இதில் பிழைகள் மேற்செல்வது தானா கவே கண்டுபிடிக்கப்பட்டுத் திருத்தப்படுகின்றன. பிழை திருத்தும் குறியீடு என்பதும் இதுவும் ஒன்றே .

self documenting code : தன் ஆவணமாக்கக் குறியீடு ; செயல்முறை எழுதியவர் அல்லது இன்னொரு செயல் முறையாளர் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய செயல் முறை அறிக்கைகள். 'சி'- மொழியை விட 'கோபால்' அதிகத் தன் ஆவணக் குறியீடுகளை அளிக்கிறது.

self-extracting file : தன் விரி வாக்கக் கோப்பு : ஒரு நிறை வேற்றப்படத்தக்க செயல்முறை யாக மாற்றப்பட்டுள்ள செறி வாக்கம் செய்யப்பட்ட ஒன்று, அல்லது அதற்கு மேற்பட்ட கோப்புகள். இது இயக்கப்படும் போது தன் உள்ளடக்கங்களை விரிவாக்கம் செய்கிறது.

self-modifying code : தானாக மாற்றியமைக்கும் குறிமுறை : பொதுவாக, ஒரு மொழிமாற்றி (compiler) அல்லது சிப்பு மொழி மாற்றியினால் (assembler) உரு வாக்கப்படும் இலக்கு நிரல் குறிமுறை புதிய கட்டளை களை, முகவரிகளை, தரவு மதிப்புகளை ஏற்கெனவே இருக்கும் நிரல் தொகுப்பில் சேர்க்கும் போது தானாக மாற்றி யமைத்துக் கொள்ளும்.

self test : தன் சோதனை : அச்சுப்பொறி செயற் பாட்டினைச் சோதனை செய் யும்முறை. இந்தச் சோதனை யில் அச்சுப்பொறி தனது எழுதப்படிக்க மட்டுமேயான நினைவகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள எழுத்து களை அச்சடிக்கிறது.

self validating : தானே செல்லு படியாக்கும் குறியீடு : சுய மதிப் பீட்டுக் குறியீடு; தன் வயச் செல்லுபடிக் குறிமானம் : தனது சொந்தப் பிழையின்மையினைத் தீர்மானித்து, அதன்படி மேற் செல்கிற குறியீடு.

self-validating code : தானாகச் சரிபார்க்கும் குறிமுறை : சரி யாகச் செயல்படுகிறதா என