பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

semantic error

1306

semiconductor device


தன்னைத்தானே சரிபார்த்துக் கொள்ளும் நிரல் குறிமுறை. பொதுவாக, சில உள்ளீட்டு மதிப்புகளை தானாகவே எடுத்துக்கொண்டு, கிடைக் கின்ற விடையை, வரவேண்டிய வெளியீட்டு மதிப்புகளோடு சரிபார்த்துக்கொள்ளும்.

semantic error : சொற் பொருட் பிழை : செயல்முறைப்படுத்து வதில் செல்லத்தக்கதாக இராத தருக்க முறையில் எழுதுதல்.

semantic gap : சொற்பொருள் இடைவெளி : தகவல் அல்லது மொழிக் கட்டமைப்புக்கும் இயல்பு உலகுக்குமிடையிலான வேறுபாடு. semantics : சொற்பொருளியல் : மொழி வடிவங்களில் சொற் களின் பொருள் பற்றி ஆராயும் அறிவியல். சைகைகளுக்கும் அவை குறிப்பிடும் பொருள் களுக்கிடையிலான தொடர்பு கள் பற்றி ஆய்வு செய்தல்.

Semanting net : சொற்பொருள் வலை : மனித அறிவை ஒரு வலைபோன்ற கட்டமைப்பாக அமைப்பாக்கம் செய்கிற ஓர் தரவு உருவாக்க முறை. இதில் மையமுனைகள், பொருள்கள், கோட்பாடுகள், நிகழ்வு அடங்கி யிருக்கும்; இவை இணைப்பு களின் தன்மையைக் குறிப்பிடுகிற இணைப்புகளால் இணைக்கப்பட்டிருக்கும்.

semaphores : அணுகுமுறைக் குறிப்பு; ஒருங்கியல்பு வரை யுருக்கள் : ஒரே சமயத்தில் இயங்கி தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட செயல் முறைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்குப் பயன் படுத்தப்படும் ஒருங்கு நிகழ் வாக்க வரையுருக்கள்.

Semiconductor : மின் கடத்தாப் பொருள்; அரைக்கடத்தி; குறை கடத்தி : தாழ் வெப்பநிலை யிலும் தூயநிலையிலும் மின் கடத்தாத திண்மப் பொருள். ஜெர்மேனியம், சிலிக்கன் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை. இதிலிருந்து ஒருங் கிணைந்த மின்சுற்று வழிகள் தயாரிக்கப்படுகின்றன.

semiconductor device : மின் கடத்தாச் சாதனம்; அரைக் கடத்திச் சாதனம்; குறைகடத்திச் சாதனம் : சிலிக்கன், ஜெர்மேனி யம் போன்ற தூயநிலையிலுள்ள படிகப் பொருள்களிலிருந்து தயாரிக்கப்படும் மின்னியல் பொருள். இவை மின்னணு நோக்கங்களுக்குப் பயன்படுத் தும் அளவுக்கு கடத்திகளோ காப்புப் பொருள்களோ அல்ல.