பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sequential access

1310

sequential file


இது காந்த வட்டுச் சேமிப்பகத்திலும் பயன்படுத்தப்படுகிறது.இதனைத் தொடர்வரிசை அணுகுதல் என்றும் கூறுவர்.இது நேரடி அணுகுதல் என் பதற்கு மாறானது.

sequential access device:வரிசைமுறை அணுகுசாதனங்கள்.

sequential access file:வரிசை அணுகுமுறைக் கோப்பு.

sequential algorithm:வரிசை முறைப் படிமுறைத் தருக்கம்:நிரலின் ஒவ்வொரு படிமுறையும் ஒரு குறிப்பிட்ட வரிசையில் இடம்பெறும் படிமுறைத் தருக்கம்.

sequential computer:வரிசை முறைக் கணினி:காலமுறை வரிசையில் நிகழ்வுகள் நிகழ்கிற கணினி.இதில்,நிகழ்வுகள் ஒரே சமயத்திலோ,ஒன்றின் மீது ஒன்றோ நிகழ்வதில்லை.

sequentiai data organization:வரிசை முறைத் தரவு அமைப்பு முறை:குறித்துரைக்கப் பட்டுள்ள வரிசைமுறைப்படித் தருக்கமுறைத் தரவுக் கூறுகளை அமைப்பாகச் செய்தல்.

sequential data set:வரிசை முறைத் தரவுத் தொகுதி:காந்த நாடாவில் அமைப்பது போன்று அடுத்தடுத்த நிலைகளில் அமைக்கப்பட்ட பதிவேடு களில் உள்ள தரவுத் தொகுதி.

sequential data structure:வரிசைமுறைத் தரவுக் கட்டமைப்பு:ஒர் அணு அதற்கு அடுத்துள்ள அணுவுக்கு அடுத்ததாகவுள்ள தரவுக் கட்ட மைப்பு.இதனைப் பக்கத் தரவு கட்டமைப்பு என்றும் கூறுவர்.

sequential device:வரிசை முறைச் சாதனம்:ஒருவகைப் புறநிலைச் சாதனம்.இதிலிருந்து தரவுகளை வரிசை முறையில் படிக்கலாம்;அல்லது இதில் தரவுகள் வரிசைமுறையில் எழுதப்பட்டிருக்கும்.இதில் எதனையும் விட்டுவிட முடியாது.

sequential execution:வரிசை முறை இயக்கம்:நிரல் கூறுகளை அல்லது நிரல்களை ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்ச்சியாக நிறை வேற்றுதல்.

sequential file:தொடர்வழிக் கோப்பு.

sequential file,index:சுட்டு வரிசைக் கோப்பு.

sequential file organization:வரிசைமுறைக் கோப்பு அமைப்பாக்கம்; வரிசைமுறைக் கோப்பு ஒழுங்கமைப்பு:ஒரு விரற்கட்டை அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வரிசை முறையில்