பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

serif

1315

server push-pull


சுற்று. தொடர் மின்சுற்றில் ஒவ்வொரு உள்ளுறுப்பு வழியாகவும் மின்னோட்டம் (current) பாயும். ஆனால் மின் அழுத்தம் (voltage) உள்ளுறுப்பு களிடையே பகிர்ந்து கொள்ளப்படும்.

serif : செரிஃப் : எழுத்துகளில் அலங்கார முடிவுகளைக் கொண்ட ஒர் எழுத்துரு. இது செரிஃப் எழுத்து முகப்பு ஆகும்.

server : புரவலர்;பணியகம்;தலைமைக் கணினி : ஒர் இணையத்திலுள்ள கணினி. இதனைப் பல பயன்பாட்டாளர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

server-based application : வழங்கன்-சார்ந்த பயன்பாடு : ஒரு பிணை யத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் ஒரு நிரல். பிணைய வழங்கனில் சேமிக்கப் பட்டிருக்கும். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிளையன்கள் அந்நிரலைப் பயன் படுத்திக் கொள்ளமுடியும்.

server cluster : வழங்கன் கொத்து : ஒருங்கிணைந்து ஒற்றைஅமைப் பாகச் செயல்படும் தனித்தனிக் கணினிகளின் குழுமம். கிளையனைப் பொறுத்த வரை வழங்கன் கொத்து ஒர் ஒற்றை வழங்கன்போலவே தோற்றமளிக்கும்.

server computer : புரவலர் கணினி.

server error : வழங்கன் பிழை : பயனாளர் அல்லது கிளையன் கணினியின் பிழையாக இல்லாமல், வழங்கன் கணினியில் ஏற்படும் பிழை காரணமாக, ஹெச்டீடீபீ வழியாகக் கேட்கப்பட்ட ஒரு தகவலை நிறை வேற்றமுடியாமல் இருக்கும் நிலை. வழங்கன் பிழைகள், 5-ல் தொடங்கும் ஹெச்டீடீபீ. யின் பிழைக் குறியீட்டால் உணர்த்தப்படும்.

server load : தலைமைக்கணினி பணியகச் சுமை : ஒரு பிணையத் தலைமைக் கணினி எத்தனை அணுகுதல்களைப் பெறுகிறது என்பதைக் கணக்கிடும் அளவு முறை. இது பொதுவாக, வினாடிக்கு இத்தனை அழைப்புகள் என்ற கணக்கில் கணக்கிடப்படுகிறது.

server push-pull : வழங்கன் தள்ளு-இழு : கிளையன்/வழங்கன் இணைந்த நுட்பங்கள் தனித்தனியாக வழங்கன் தள்ளல், கிளையன் இழுவை என்று வழங்கப்படுகின்றன. வழங்கன் தள்ளலில், வழங்கன், தகவலை கிளையனுக்குத் தள்ளி விடுகிறது. ஆனால் தரவு இணைப்பு திறந்த நிலை