பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

server-side include

1316

Service Advertising


யிலேயே உள்ளது. இதன் காரணமாய் தேவையான அளவுக்குத் தகவலை உலாவிக்குத் தொடர்ந்து அனுப்பிவைக்க வழங்கனுக்குச் சாத்தியமாகிறது. கிளையன் இழுவையில் வழங்கன், கிளையனுக்குத் தகவலைத் தருகிறது; ஆனால் தரவு இணைப்பு தொடர்ந்து திறந்திருப்பதில்லை. குறிப்பிட்ட காலஇடைவெளிக்குப் பிறகு மேலும் தரவு அனுப்பும் பொருட்டு தரவு இணைப்பை மீண்டும் திறக்குமாறு உலாவிக்கு வழங்கன் ஒரு ஹெச்டீஎம்எல் நிரலை அனுப்பி வைக்கும். பெரும்பாலும் ஒரு புதிய யூஆர்எல் லைத் திறக்கும் போது இது நிகழும்.

server-side include : வழங்கன் பக்கச் சேர்ப்புகள் : வைய விரி வலை ஆவணங்களில் இயங்கு நிலையில் உரையைச் சேர்ப்பதற்கான ஒரு நுட்பம். இவை வழங்கனால் அறிந்து கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுகின்ற தனிச் சிறப்பான கட்டளைக் குறிமுறைகளாகும். அந்த ஆவணம் உலாவிக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்னதாக ஆவணத்தின் உடல் பகுதியில் அக்கட்டளைகளின் விடை சேர்க்கப்பட்டுவிடும். எடுத்துக்காட்டாக, உலாவிக்கு அனுப்பப்படும் ஆவணத்தில், அன்றைய தேதி, அப்போதைய நேரத்தை முத்திரையிட்டு அனுப்பி வைக்கலாம்.

server tier : வழங்கன் அடுக்கு.

server type : வழங்கன் வகை.

service : சேவை : 1. தொழில் நுட்ப உதவி அல்லது பிணைய வசதி போன்ற வாடிக்கையாளர் அடிப்படையிலான அல்லது பயனாளர் நோக்கிலான ஒரு பணி. 2. நிரலாக்கம் மற்றும் மென்பொருள்களில் ஒரு நிரல் அல்லது நிரல்கூறு பிற நிரல்களுக்கு உதவி செய்தல். பெரும்பாலும், வன்பொருளுக்கு நெருக்கமான அடிநிலைப் பணிகளாக இருக்கும்.

Service Advertising Protocol : சேவை விளம்பர நெறிமுறை : ஒரு பிணையத்திலுள்ள (கோப்பு வழங்கன் அல்லது பயன்பாட்டு வழங்கன் போன்றவற்றிலுள்ள) ஒரு சேவை-வழங்கும் கணுக் கணினி, பிணையத்

திலுள்ள பிற கணுக்களுக்குத் தன்னை அணுக முடியும் என அறிவித்தல். ஒரு வழங்கன் இயக்கப்படும்போது, தனது சேவைகளை விளம்பரப்படுத்த இந்த நெறிமுறையைப் பயன்படுத்திக் கொள்கின்றது. அதே வழங்கன் அகல்நிலைக்கு மாறும்போது, இதே நெறி