பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bar

131

bare bone


தோன்றும் பக்கம். அத்தயாரிப்பை பற்றியும் அதைத் தயாரித்த நிறுவனம் பற்றியும் தகவல் இடம் பெற்றிருக்கும்.

bar:பட்டை.

bar chart:பட்டை நிரல் படம்:வணிக வரைபடத் தொகுப்புகளில் பரவலாகப் பயன்படும் வரைபடம் காலஅட்டவணையைக் காட்டுவதற்குப் பயன்படுவது.

bar code:பட்டைக் குறிமுறை;பட்டைக் கோடு;பட்டை வரி:வருடு பொறியினால் படிப்பதற்காக ஒட்டுச்சீட்டில் பயன்படுத்தப்படும் குறியீடு. சில்லறை விற்பனைப் பொருள்களை அடையாளம் காண பட்டைக் குறியீடு முறை பயன்படுகின்றன. நூல் நிலையங்களில் உள்ள புத்தகங்களையும் இரயில் வண்டி பெட்டிகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

bar-code reader:பட்டைக் குறிமுறை படிப்பி;பட்டைக் கோடு படிப்பி; பட்டை படிப்பான்;பட்டைக் குறியீட்டுப் படிப்பான்:பிரதிபலிக்கும் ஒளியின் மூலம் பட்டைக் குறியீடுகளைப் படிக்கும் ஒரு ஒளிப்பட மின் சக்தி வருடி.

bar-code scanner:பட்டைக் குறிமுறை வருடு பொறி:இணையான பட்டைகளின் வடிவத்தில் பதிவு செய்யப்பட்ட எழுத்துகளைக் கொண்ட பொருள்களின் தகவலைப் படிக்கக்கூடிய ஒளிச்சாதனம். இருப்பு வைப்பதற்காகவோ அல்லது செயலாக்கத்திற்காகவோ எழுத்துகள் இலக்க சமிக்கைகளாக மாற்றப்படுகின்றன.

bar code wand:பட்டைக் குறி முறைக் கோடு.

bare board:வெற்று அட்டை:வெறும் பலகை:எந்த ஒரு மின்னணுச் சாதனமும் இல்லாத அச்சிட்ட மின்கற்று அட்டை

bare bone:வெற்றெலும்பு;சிக்கனப் படைப்பு:வேறெந்தக் கூடுதல் சிறப்புக் கூறுகள் எதுவுமில்லாத,கட்டாயத் தேவையான குறைந்தபட்சக் கூறுகளை மட்டுமே கொண்டுள்ள ஒரு கணினி அல்லது ஒரு மென் பொருள் தொகுப்பு. மென்பொருளெனில்,கொடுக்கப் பட்ட பணியை நிறைவேற்று வதற்குரிய செயல்கூறுகளை மட்டுமே கொண்டிருக்கும். ஒரு கணினி எனில் வேறெந்தக் கூடுதல் புறச்சாதனங்களும் இல்லாமல் கணினி இயங்கத் தேவையான மிகக்குறைந்த வன்பொருள் உறுப்புகளையே கொண்டிருக்கும். இயக்க முறைமை தவிர வேறெந்த மென்பொருளும் அக்கணினியில் இருக்காது.