பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ்

1320

shade


sg : எஸ்ஜி : ஒர் இணைய தள முகவரி சிங்கப்பூரைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

. sgm : . எஸ்ஜிஎம் : தரநிலைப் பொதுப்படைக் குறியீட்டு மொழி (Standard Generalized Markup Language-SGML) யில் குறியாக்கம் செய்யப்பட்ட கோப்பு களை அடையாளம் காட்டும் எம்எஸ் டாஸ்/விண்டோஸ் 3. x கோப்பு வகைப் பெயர். எம்எஸ் டாஸ் மற்றும் விண்டோஸ் 3. x முறைமைகளில் கோப்பின் வகைப்பெயர் மூன்றெழுத்துகள் மட்டுமே. எனவேதான், sgml என்கிற வகைப்பெயர் மூன்றெழுத்தாகச் சுருக்கப்பட்டு விடுகிறது.

SGML : எஸ்ஜிஎம்எல் : தர நிலைப் பொதுப்படைக் குறியீட்டு மொழி எனப் பொருள் படும் Standard Generalized Markup Language என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். 1986ஆம் ஆண்டு பன்னாட்டுத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (ISO) ஏற்றுக்கொண்ட தகவல் மேலாண்மைத் தர வரை யறை. பணித்தளம் மற்றும் பயன்பாட்டு மென்பொருள் சாராத ஆவணங்களை உருவாக்க வழிகோலுகிறது. இவற்றின் வடிவாக்கம், சுட்டுக்குறிப்பு மற்றும் தொடுப்புத் தகவல்கள், பணித்தளம் மாறினாலும் மாறாமல் காப்பாற்றப் படுகின்றன. பயனாளர்கள் தமது ஆவணங்களின் கட்டமைப்பை இலக்கணப் போக்கிலான நுட்பத்துடன் வடிவமைக்க உதவுகிறது.

. sh : எஸ்ஹெச் : ஒர் இணைய தள முகவரி செயின்ட் ஹெலினா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

SHA : எஸ்ஹெச்ஏ : பாதுகாப்பான கூறுநிலைப் படிமுறைத் தருக்கம் எனப் பொருள்படும் Secure Hash Algorithm என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். செய்தி அல்லது தரவுக் கோப்பினை உருவகிக்க 160 துண்மி (பிட்) குறிமுறை யில் கணக்கிடும் நுட்பம். செய்திச் சுருக்கம் என்றும் கூறப் படும். அனுப்புபவரே எஸ்ஹெச்ஏ-யைப் பயன்படுத்துகிறார். செய்தியைப் பெறுபவர் இலக்கமுறை ஒப்பத்தைச் சரிபார்க்க இதனைப் பயன் படுத்து கிறார்.

shade : கருமைச் சாயல்;நிழல் : கணினி வரைகலையில், தூய வண்ணத்துடன் கலக்கப்படும் கருமை நிறத்தின் அளவு.