பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sibling

1329

Sidekick


sibling : உடன்பிறப்பு : ஒரு மரவுரு தரவுக் கட்டமைப்பில் ஒரே மூதாதையரிடமிருந்து கிளைத்த கணுக்கள்.

B, C ஆகியவை உடன் பிறப்புகள் D, E, Fஆகியவை உடன்பிறப்புகள்

sideband : பக்கக்கற்றை ; ஓரக்கற்றை : பண்பேற்றப்பட்ட சுமப்பி அலைக்கற்றையின் மேற்பகுதி அல்லது அடிப்பகுதி. இருபகுதிகளும் வெவ்வேறு தகவலைச் சுமந்து செல்லுமாறு செய்யமுடியும். இதன் காரண மாய் ஒற்றைத் தடத்தில் இரண்டு மடங்கு தகவலைச் சுமந்து செல்ல முடியும்.

sidebar : பக்கப் பட்டை;ஒரப் பட்டை : ஒர் ஆவணத்தில் முதன்மையான உரைப்பகுதிக்கு பக்கவாட்டில் இடம்பெறும் உரைத் தொகுதி. பெரும்பாலும் ஒரு வரைகலைப் படம் அல்லது கரை மூலம் பிரிக்கப் பட்டிருக்கும்.

sidebard : பக்கக் கவசம் : ஒர் ஆவணத்தின் முக்கிய வாசகப்பகுதியின் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு வாசகத் தொகுதி அல்லது ஒரு வரை கலைப் பிம்பம்.

sided, double : இருபக்க.

sided, single : ஒருபக்க.

side effect : பக்க விளைவு : ஒரு நடைமுறையில் அடிப்படை விளைவுடன்கூட ஏற்படும் பக்கவிளைவு.

side head : பக்கத் தலைப்பு;ஒரத்தலைப்பு : ஒர் அச்சு ஆவணத்தின் இடப்புற ஒரப் பகுதியில் (margin) உரையின் உடல்பகுதியின் மேற்பகுதியோடு கிடைமட்ட சீரமைவாக இருக்கும் தலைப்பு. உரைப்பகுதிக்கு செங்குத்துச் சீரமைவாக இருப்பது இயல்பான தலைப்பாகும்.

sidekick : சைடுகிக் : போர்லண்ட் தயாரித்துள்ள சொந்தக் கணினிக்கான மேசைப் பயன்பாட்டுச் செயல்முறை. 1984 இல் புகுத்தப்பட்டது. இது, சொந்தக் கணினிக்கான முதலாவது"பாப்பப்" (TSR) செயல்முறையாகும். இதில் ஒரு கணிப்பி, வேர்ல்ட்ஸ்டார் இணக்க முடைய குறிப்பேடு, நியமன நாட்குறிப்பு, தொலைபேசிச் சுழற்சி, ASCII அட்டவணை ஆகியவை அடங்கியுள்ளன.