பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

signling rate

1331

sign flag


போன்றே கட்டுப்பாட்டுச் சைகைகளை அனுப்புவதைக் குறிக்கிறது. "வெளிக்கற்றை"என்பதை அலைவீச்சுக்கு வெளியே கட்டுப்பாட்டுச் சைகைகளை அனுப்புவதைக் குறிக்கிறது.

signaling rate : சைகை விகிதம்;சமிக்கையிடும் விகிதம் : ஒரு செய்தித்தொடர்பு இணைப்பில் சைகைகள் அனுப்பப்படும் விகிதம்.

signal processing : காலம் சார்ந்த தரவு அலசல்.

signal-to-noise ratio : சைகை ஒசைவிகிதம்;சமிக்கை இரைச்சல் விகிதம் : தரவுத் தொடர்புகளில் தேவையான சைகைக்கும் தேவையற்ற ஒசைக்கும் இடையிலான விகிதம்.

signature : ஒப்பம்;கையொப்பம்;குறியீட்டு எண் : அடையாளங் காண்பதற்காகவும், படிப் பாதுகாப்புக்காகவும் வன்பொருளில் அல்லது மென் பொருளில் அமைக்கப்பட்டுள்ள தனி எண்.

signature block : ஒப்பத் தொகுதி : ஒரு மின்னஞ்சல் செய்திக்கட்டுரை அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்பாகக் கடிதத்தின் இறுதியில், அஞ்சல் கிளையன் மென்பொருளினால் தானாகவே சேர்க்கப்படும்உரைப்பகுதி. ஒப்பத்தொகுதியில் பெரும்பாலும் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் அச்செய்தியை/கட்டுரையை ஆக்கியோரை அடையாளங்காட்டும் குறிப்புகள் அடங்கியிருக்கும்.

signature capture : கையெழுத்துக் கவர்வு.

sign bit : அடையாளத் துண்மி;அடையாள இருநிலைத் துண்மி.

sign digit : சைகை எண்;அடையாள எண்;குறி எண்;குறி இலக்கம் : ஒரு சொல்லின் குறி நிலையிலுள்ள இலக்கம்.

signed : அடையாளமுள்ள.

sign extension : குரி விரிவாக்கம்;அடையாள விரிவாக்கம் : ஒரு பதிவேட்டின் உயர்வரிசை நிலையிலுள்ள குறித் துண்மியின் இரட்டைப் படிநிலை. இது பொதுவாக ஒன்றின் குறைநிரப்பு அல்லது இரண்டின் குறைநிரப்பு இரும மதிப்புகளினால் நடைபெறுகிறது.

sign flag : குறிக்கொடி அடையாளக் கொடி : ஒரு செயற்பாட்டின் மிக முக்கியமான துண்மி 1 என்னும் மதிப்பளவினைக் கொண்டிருக்குமானால்,

1 இன் நிலைக்குச் செல்லும் கரணம்.