பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

single board computer

1336

single user


single board computer : ஒற்றைப் பலகைக் கணினி;ஒரே அட்டைக் கணினி : ஒரே பலகையில் CPU, ROM, RAM, புறநிலை இடைமுகப்புகள் உட்பட அனைத்து மின்சுற்று நெறியையும் கொண்டுள்ள கணினி.

single click : ஒற்றைச் சொடுக்கு.

single density : ஒற்றைச் செறிவு;தனி அடர்த்தி;ஒற்றை அடர்த்தி : ஒரு நெகிழ்வட்டில் தரவுகளைச் சேமித்து வைக்கும் முறை.

single density disk : ஒற்றை அடர்த்தி வட்டு : முதல் தலைமுறை நெகிழ்வட்டு.

single numeric value : ஒற்றை எண்ணியல் மதிப்பளவு.

single path : ஒற்றைவழி : ஒரு போகு இடை முகப்புக்கு மாறுபட்டது.

single precision : ஒற்றைத்துல்லியம்;ஒற்றைச் சரிநுட்பம்;ஒரு மடங்கு துல்லியம் : ஒர் எண்ணைக் குறிப்பதற்கு ஒரு கணினிச் சொல்லைப் பயன் படுத்துதல். இது, இரட்டைத் துல்லியம், மும்மைத் துல்லியம் என்பவற்றி லிருந்து வேறுபட்டது.

single precision number : ஒற்றைத் துல்லிய எண் நினைவகத்தின் 4 எண்ணியல்களுக்கு மட்டுமே பொதுவாக ஒதுக்கப்படும் ஒரு பதின்மப் புள்ளி எண்.

single precision variable : ஒற்றைத் துல்லிய மாறிலி.

single setup : ஒற்றை அமைவு.

single-sided : ஒற்றைப் பக்க : ஒரே ஒரு பக்கத்தில் மட்டுமே தகவல் பதிய முடிகிற நெகிழ் வட்டுகளைப் பற்றியது.

single sided disk : ஒரு பக்க வட்டு;ஒற்றைப் பக்கவட்டு : தகவல் படிக்கவும், எழுதவும் ஒரே ஒரு பக்கத்தை மட்டும் பயன்படுத்தும் வட்டு.

single step : ஒற்றை நடவடிக்கை;ஒரு நிலை;ஒற்றை அடி : கணினி இயங்கத் தொடங்கியவுடன் ஒர் நிரல் மட்டுமே நிறைவேற்றப்படும் வகையில் அமைந்த கணினிச் செயற்பாடு.

single tasking : ஒற்றைப் பணி.

single threading : ஒற்றை இழையூட்டம்;ஒற்றைப் புரியாக்கம் : 1. ஒரு நிரலுக்குள் ஒரு நேரத்தில் ஒரேயொரு செயலாக்கத்தை மட்டுமே இயக்குதல். 2. ஒரு மரவுரு தரவு கட்டமைப்பிலுள்ள ஒவ்வொரு இலைக் கணுவும் அதன் பெற்றோரைக் குறிக்கும் சுட்டிணைக் கொண்டிருக்கும் நிலை.

single user : ஒற்றைப் பயனாளர்.