பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

small business

1342

smart


நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

small business computer : சிறுவணிகக் கணினி : வணிகப் பயன்பாடு களைச் செய்முறைப் படுத்துவதற்கான கணினிப் பொறியமைவினைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள தனித்தியங்கும் தரவு செய்முறைப்படுத்தும் பொறி யமைவு. சம்பளப் பட்டியல், கணக்குக் கொடுக்கல் வாங்கல் நிரல் பதிவு, சரக்குப் பட்டியல், பொதுப்பேரேடு போன்ற பயன்பாடுகளுக்கு இது பயன்படுகிறது.

small caps : சிறு பெரிய எழுத்துகள் : ஆங்கில எழுத்துகளில் சிறிய எழுத்து, பெரிய எழுத்து வேறுபாடு உண்டு. ஒரு குறிப்பிட்ட எழுத்துருவில் சிறிய எழுத்துகளும் பெரிய எழுத்துகளும் உண்டு. ஒர் எழுத்துருவில் வழக்கமாக இருக்கும் பெரிய எழுத்துகளின் உருவளவைவிடச் சிறியதாக இருக்கும் பெரிய எழுத்துகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. (எ-டு) : Small, SMALL, SMALL.

small icons : சிறு சின்னங்கள்.

small model : சிறிய மாதிரியம் : இன்டெல் 80x86 செயலிக் குடும்பத்தில் பயன்படுத்தப்படும் நினைவக மாதிரியம். இதில் நிரல் குறிமுறைக்கு 64 கேபி இடமும், தரவுகளுக்கு 64 கேபி இடமும் மட்டுமே ஒதுக்க முடியும்.

small scale integration (SSI) : சிற்றளவு ஒருங்கிணைப்பு;எஸ்எஸ்ஐ : ஒருங்கிணைந்த சுற்று வழிகளின் வகை. இதில், ஒரு சிப்புவில் மிகக் குறைந்த செயற்பணிகள் அடங்கியிருக்கும். இது, நடுத்தர ஒருங்கிணைப்பு, பேரளவு ஒருங்கிணைப்பு, மிகப் பேரளவு ஒருங்கிணைப்பு ஆகிய வற்றி லிருந்து மாறுபட்டது.

SMALL TALK : ஸ்மால்டாக்;கணினி மொழிகளில் ஒருவகை : சாதாரண மக்களும் கணினியை மிக எளிதாகப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக் கப்பட்ட மொழி மற்றும் மென்பொருள் பொறியமைவு. திரையில் உரு வங்களின் படவடிவங்களில் இயன்றளவு செயற்பாட்டுத் தேர்வுகளுக்கு உதவுகிறது. மிக அதிக அளவு படப்பரிமாற்றங்களுக்குச் இப்பொறியமைவு கள் உதவுகின்றன.

smart : விரைவூக்கம்;திறமையான, சூட்டிகையான : தனக்கேயுரிய சில கணிப்புத்திறனைக் கொண்டிருத்தல். விரைவூக்கச்