பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

smart produce

1344

SMDS


எந்திரங்கள்;சூட்டிகை எந்திரங்கள் : கட்டுப்பாட்டுத் தனிமங்களாக நுண் செய் முறைப்படுத்துகிற எந்திரங்கள்.

smart produce : விரைவூக்கப் பொருள் : உள்ளேயே அமைக்கப்பட்டுள்ள நுண்கணினிகளை அல்லது துண்செயலிகளைக் கொண்டிருக்கிற தொழில் துறை மற்றும் நுகர்வோர் உற்பத்திப் பொருள்கள். இவை, இத்தகைய பொருள்களின் செயல் திறனையும் திறம்பாடுகளையும் கணிசமாக அதிகரிக்கின்றன.

smart quotes : துடுக்கு மேற்கோள் குறிகள் : பெரும்பாலான சொல் செயலித் தொகுப்புகளில் " என்னும் சாதாரன மேற்கோள் குறிவிசையை அழுத்தும் போது, தாமாகவே சிறப்பு மேற்கோள் ( ) குறிகளாக மாறிக் கொள்ளும் வசதி உள்ளது.

SMART system : ஸ்மார்ட் முறைமை;ஸ்மார்ட் அமைப்பு : SMART என்பது தானாகவே கண் காணிக்கும் பகுப்பாய்வு அறிவிப்புத் தொழில்நுட்பம் என்று பொருள்படும் Self-Monitoring Analysis and Reporting Technology என்ற தொடரின் தலைப்பெழுத் துக் குறும்பெயர். ஒரு சாதனத்தின் செயல் திறனையும் நம்பகத் தன்மையையும் கண்காணித்து முன்னறிந்து சொல்லும் தொழில் நுட்பம். இத்தொழில் நுட்பத்தில் செயல்படும் அமைப்புகள் பல்வேறு பழுதாய்வுச் சோதனைகளை மேற்கொண்டு சாதனங்களின் குறைகளைக் கண்டறிந்து சொல்கின்றன. உற்பத்தியைப் பெருக்குதல், தரவுகளைப் பாதுகாத்தல் இதன் நோக்கம்.

smart terminal : விரைவூக்க முனையம்;திறமையான முகப்பு : சூட்டிகையான முனையம் : அனுப்பப்படும் அல்லது பெறப்படும் தகவல்களைச் செய்முறைப் படுத்துவதற்கு ஒரளவுக்குத் திறம்பாடுகள் கொண்ட முனையம். இது ஒர் அறிவுத்திறன் முனையம் போன்று திறனுடையதன்று. இது "ஊமை முனையம்" என்பதிலிருந்து வேறுபட்டது.

smash : தகர்;மோது : சேமிப்பியின் ஒரு பகுதியை, அதன்மேல் இன்னொரு செயல்முறையை எழுதுவதன்மூலம் அழித்தல்.

SMDS : எஸ்எம்டிஎஸ் : இணைப்பிடு பல் மெகாபிட் தரவு சேவைகள் என்று பொருள்படும் Switched Multimegabit Data Services என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இது ஒரு மீஉயர் வேக, இணைப்பிடு தரவுப் போக்கு