பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

soft font

1349

soft return


கும் ஒசைப் பெருக்கம். இதனால் கணினி நினைவகங்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்களில் திடீர் மாற்றம் ஏற்படக்கூடும். இந்த மாற்றங்கள் மென்தளர்வுகள் எனப்படும். இது சுற்றுவழிகளில் ஒருங்கி ணைந்த நுண்மின்னணு அமைப்பிகளின், வடிவளவுகள் குறைந்து கொண்டே வருவதால் ஏற்படும் எதிர்பாராத விளைவுகளில் இதுவும் ஒன்று.

soft font : மென் எழுத்து : வன்பொருளிலிருந்து அல்லாமல் மென் பொருள் நிரல்களின் கோரிக்கையிலிருந்து வரவழைக்கப்படும் ஒரு எழுத்துரு. இந்த எழுத்துருக்களைப் பொதியுறைகளைவிட மலிவான விலை யில் வாங்கலாம். பயனாளரின் குறிப்பிட்ட தேவைகளுக்கேற்ப இதனைத் தகவமைத்துக் கொள்ளலாம். மென்எழுத்துருக்களை பயன்படுத்துவதற்கு முன்பு அச்சுப்பொறிக்கு இறக்கம் செய்தல் வேண்டும். சொல் செயல் முறைப்படுத்திகள், மேசை வெளியீட்டுத் தொகுதிகள் பெரும்பாலும் இதனைக் கொண்டிருக்கின்றன.

soft/hard copy : மென்/வன் நகல்;வட்டு/அச்சு நகல்.

soft hyphen : மென் இடைக்கோடு;மென் ஒட்டுக்குறி;மென்சிறுகோடு : ஒருவரியின் இறுதியில் ஒரு சொல்லை அசைகளிடையே முறிப்பதற்காக மட்டும் அச்சிடப்படும் ஒட்டுக் குறி.

soft keys : மென்சாவிகள்;மென் விரற்கட்டை;மென்விசைகள் : பயன்பாட்டாளர் வரையறுத்த பொருளைக் கொண்டிருக்கும் விசைப் பலகையிலுள்ள விரற்கட்டைகள். இதன் பொருள், பயன் பாட்டாளருக்கும், செயல்முறைக்கும் மாறுபடக்கூடியது என்பதால் மென்விசை எனப் பெயர் பெற்றது.

soft page break : மென்பக்க முறிப்பு.

soft patch : மென் பட்டை : நடப்பு நிகழ்வுக்கு மட்டுமே நீடிக்கக்கூடிய நினைவகத்தில் தற்போதுள்ள எந்திர மொழியில் பொருத்தப்படும் ஒரு விரைவுச் சாதனம்.

soft return : மென் மடக்கு;மென் திருப்பம் : வரியின் இறுதியைக் குறிப்பதற்கு வாசக ஆவணத்தில் மென்பொருளினால் செருகப்படும் குறியீடு. அதிகத் தகவல்கள் செலுத்தப் பட்டால், அதற்கேற்ப இந்த மடக்கு மாற்றப்பட்டு, வாசகம் திருத்தபடுகிறது. அச்சடிக்கும்