பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

software product

1354

software term


தொழிலில் மூன்றாம் தரப்பு மென்பொருள் அதிகம் பரவி விட்டதால், இந்தத் திறன் மென் பொருள்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது.

software product : மென் பொருள் விளைபொருள் : செயல்முறைகள் தரவு ஆவணமாக்கும் சில சமயம் விற்பனையாளர் உதவி ஆகியவை அடங் கியுள்ள விற்பனையாளர் தொகுதி. இது செயல்முறைப் படுத்தும் பொருள் என்றும் அழைக்கப்படும்.

software protection : மென் பொருள் பாதுகாப்பு;மென் பொருள் காப்பு : மென்பொருள்களை அனுமதியின்றிப் படியெடுப்பதைத் தடுப்பதற்கான பாதுகாப்பு.

software publisher : மென் பொருள் வெளியீட்டாளர்;மென் பொருள் பதிப்பாளர் : மென் பொருள் தொகுதிகளை வெளியிட்டு, விற்பனை செய்கிற வணிகம்.

software publishing : மென் பொருள் பதிப்பீடு : வழக்கத்துக்கு மாறான மென்பொருள் தொகுப்புகளை வடிவமைத்து, உருவாக்கி வினியோகித்தல்.

software resources : மென் பொருள் ஆதாரம்;மென்பொருள் மூலம்; மென்பொருள் வளம் : கணிப்புப் பொறியமைவுடன் இணைவுடைய மென்பொருள்களைக் குறிக்கும் செயல் முறை மற்றும் தரவு ஆதாரங்கள்.

software science : மென்பொருள் அறிவியல் : கணினிச் செயல் முறைகளின் அளவிடக்கூடிய பண்புகள் தொடர்பான ஆய்வுத் துறை.

software stack : மென்பொருள் அடுக்கு : நினைவகத்தில் அமைக் கப்பட்டுள்ள அடுக்கு.

software suite : மென்பொருள் கூட்டுத்தொகுப்பு.

software system : மென்பொருள் பொறியமைவு;மென்பொருள் முறைமை : ஒரு கணினிப் பொறியமைவில் பயன்படுத்தப்படும் கணினிச் செயல்முறைகள் அவற்றின் ஆவணமாக்கம் ஆகியவற்றின் முழுத்தொகுதி.

software technology : மென் பொருள் தொழில்நுட்பம்;கணினி செயல்முறை தொழில் நுபம்.

software term : மென்பொருள் சொல் : கணிப்பொறி அமைப்பைக் கட்டுப்படுத்தி வன்பொருளை இயக்குவதுபோல் அல்லாமல் மென்பொருள் தொகுதி நிரல் தொடரைக் குறிப்பிடும் மாற்றுச் சொல்.