பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135


bat காணப் பயன்படும் வகைப் பெயர் (Extention), . பேட் கோப்புகள் இயங்குநிலை கோப்புகளாகும். ஏனைய நிரல் கோப்புகளை அழைக்கும் கட்டளைகள் . பேட் கோப்பில் இடம் பெற முடியும்.

bat : வளைவு : மின்னணு சாதனங்களைப் பொருத்தக்கூடிய அலமாரி அல்லது அடுக்கு கருவிகளின் வளைவு என்றும் அழைக்கப்படும்.

BAT : பேட் : ஒரு கோப்பு வகை

batch : தொகுதி : 1. ஒரு கணினியில் செயலாக்கத்திற்காக ஒரே தொகுதியாகக் கருதப்படும் நிரல்கள் அல்லது பதிவுகளின் குழு. 2. தொகுதி முறை செயலாக்கத்தைப் பயன்படுத்துதல்.

batch control : தொகுதிக் கட்டுப்பாடு : தகவலின் சரியான தன்மையை உறுதி செய்ய கட்டுப்பாடுகளின் தொகுப்பைப் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தினை இது குறிப்பிடுகிறது.

batch control document : தொகுதிக் கட்டுப்பாட்டு ஆவணம் : உள்ளீட்டு தரவு தொகுதியைக் கொண்ட கட்டுப்பாட்டு ஆவணம். இதில் கட்டு எண், தொகுப்பு தேதி, ஆவணங்களின் எண்ணிக்கை, உள்ளீட்டு தரவுவின் கட்டுப்பாட்டு மொத்த எண்ணிக்கைகள் போன்ற தரவு இருக்கும்.

batch file : தொகுதிக் கோப்பு : வரிசையாக இயக்கப்படும் கட்டளைகளின் பட்டியலைக் கொண்ட டாஸ் கோப்பு. ஒரு குறிப்பிட்ட (திரும்பச் செய்யும்) பணியை நிறைவேற்ற அடிக்கடி விசைகள் அடிப்பதைத் தவிர்க்க தொகுதிக் கோப்புகள் பயன் படுத்தப்படுகின்றன.

batch file transmission : கோப்புத் தொகுதி அனுப்புகை : ஒரேயொரு கட்டளை மூலம் கோப்புகளின் தொகுதியை அனுப்பி வைக்கப் பயன்படும் கட்டளை

batch job : தொகுதி வேலை.

batching : தொகுதிப்படுத்தல்; தொகுதியாக்கம்.

batch processing : தொகுதிச்செயலாக்கம்; தொகுப்பு முறை : 1. செய்யப்பட வேண்டிய நிரல்களை குறியீடு செய்து தொகுத்து குழுக்கள் அல்லது தொகுதிகளாகச் செயலாக்கத்திற்கு தயார் செய்யும் முறை. பயனாளர் ஒரு கணினி மையத்திற்கு வேலை யைக் கொடுத்தால் அங்கு நிரல் தொகுதியாக்கப்பட்டு செயல்