பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

source directory

1360

source(the)


அடுக்கு"என்பதிலிருந்து வேறுபட்டது.

source directory:மூலக் கோப்பகம்:ஒரு கோப்பு நகலெடுப்புச் செயல்பாட்டில் நகலெடுக்கவிருக்கும் கோப்புகளின் மூலப்பதிப்புகள் இருக்கும் கோப்பகம்.

source disk:ஆதார வட்டு;மூல வட்டு:தரவுகளில் எதிலிருந்து பெறப்படுகின்றனவோ அந்த வட்டு இது இலக்கு வட்டு என்பதிலிருந்து வேறுபட்டது.

source document:ஆதார ஆவணம்;ஆதார மொழி;மூலஆவணம்: ஆதாரத் தரவுகளை எதிலிருந்து எடுக்க முடியுமோ அந்த மூல ஆவணம். பற்றுச் சீட்டு,விற்பனைச் சீட்டு போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு.

source drive:ஆதார இயக்கி:தரவுகள் எதிலிருந்து பெறப் படுகின்ற னவோ அந்த வட்டு அல்லது நாடா இயக்கி.இது இலக்கு இயக்கி என்பதிலிருந்து வேறுபட்டது.

source file:ஆதாரக் கோப்பு:பொதுவாக ஒர் உயர்நிலை மொழியில் எழுதப்பட்டுள்ள ஒரு செயல்முறை.இது,ஒரு மொழிபெயர்ப்பு அல்லது தொகுப்புமூலம் பொருள் கோப்பினை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது.

source language:ஆதார மொழி;மூல மொழி:ஒர் இணைப்பு மொழி போன்ற ஒரு தாழ்நிலை மொழி அல்லது பேசிக்,ஃபோர்ட்ரான்,கோபால் போன்ற ஆதாரச் செயல்முறை எழுதப்படுகின்ற ஒர் உயர் நிலைமொழி.

source media:ஆதார ஊடகம்;மூல ஊடகம;ஆதாரச சாதனம:மூலத் தரவு எடுக்கப்படுகிற ஆதார ஆவணங்கள்.

source programme:ஆதாரச் செயல்முறை;ஆதார நிகழ்வு;மூல நிரல் தொடர்:பேசிக்,ஃபோர்ட்ரான்,கோபால்,பாஸ்கல் போன்ற ஆதார மொழி யில் அல்லது இணைப்பு மொழியில் எழுதப்பட்டுள்ள கணினிச் செயல்முறை.இது ஒரு மொழி பெயர்ப்புச் செய்முறைக்கு உட்பட வேண்டும்.

source register:ஆதாரப் பதிவேடு;மூலப் பதிவு;மூலப் பதிவகம்: மாற்றம் செய்யப்படும் ஒரு தரவு சொல்லில் அடங்கியுள்ள பதிவேடு.

source(the):மூலம்;சோர்ஸ்:"சோர்ஸ் தொலைத் தொடர்புக் கழகம்" என்ற அமைவனத்தினால் நடத்தப்படும் தரவு