பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

source statement

1361

space-division


பயன்பாட்டுப் பணி. சந்தாதாரர்களுக்கு இந்தச் சேவை கிடைக்கும். கணினி பயன்பாட்டாளர்கள், விளையாட்டுகள் ஆடவும், தரவு ஆதாரங்களை அணுகவும், மின்னஞ்சல் ஆனுப்பவும், பெறவும், செய்தியிதழ்கள் படிக்கவும் இன்னும் பல காரியங்களுக்கும் பயன்படுகிறது.

Source Statement : ஆதார அறிக்கை : ஒரு செயல் முறைப்படுத்தும் மொழியிலுள்ள (ஆதார மொழி) நிரல் சொற்றொடர்.

source worksheet : மூலப் பணித்தாள்.

SPA : எஸ்பிஏ;ஸ்பா : 'பொறியமைவுகள் மற்றும் நடைமுறைகள் சங்கம்' என்று பொருள்படும் Systems and Procedures Association என்பதன் தலைப் பெழுத்துச் சுருக்கம். கருத்தரங்குகள் தொழில்முறைக் கல்வி, ஆராய்ச்சி ஆகியவை நடத்தி மேலாண்மைப் பொறியமைவுகளையும் நடைமுறை களையும் மேம்படுத்துவது இதன் நோக்கம்.

space : எழுத்திடவெளி;இடவெளி : 1. எழுத்துகளிடையிலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வெற்றெழுத்துகள். 2. இரும சுழி (பூஜ்யம்) க்கு இணையான தொடர்பு வழி நிலை.

spacebar : இடவெளி விசை;இடவெளிப் பட்டை;இட வெளிச் சட்டம் : ஒரு விசைப் பலகையின் அடியிலுள்ள இட வெளிகளை உண்டாக்குவதற் கான நீண்ட குறுகிய விரற் கட்டை. இதனை ஒருமுறை அழுத்தினால், இது வாசகத்தில் செருகல் புள்ளியில் இடைவெளி உண்டாக்குகிறது.

space character : இடவெளி எழுத்து;இடவெளிக்குறி : விசைப் பலகையில் இட வெளிப்பட்டையை அழுத்துவதால் பதிவாகும் குறி. திரையில் அது வெற்று இடவெளியாக இருக்கும்.

space-division multiplexing : இடவெளிப் பிரிவு ஒன்றுசேர்ப்பு :

மனிதர்களால் இயக்கப்பட்ட இணைப்பு பலகைகளுக்குப் பதிலாக முதன் முதல் புகுத்தப்பட்ட தகவல் தொடர்பு ஒன்றிணைப்பின் தானியங்கு வடி வம். ஆனால் அதன்பின் இம்முறைக்குப் பதிலாக அலை வரிசைப் பிரிவு ஒன்றிணைப்பு முறை (FDM) அறிமுகப்படுத்தப் பட்டது. இப்போது நேரப் பிரிவு ஒன்றிணைப்பு முறை (TDM) பின்பற்றப்படுகிறது.